தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ தங்கம் விலை சவரனுக்கு ரூ.3,000 சரிவு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.3,000 சரிவு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.3,000 சரிவு


ADDED : அக் 29, 2025 12:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 29, 2025 12:46 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:தமிழகத்தில் இம்மாதம், 17ம் தேதி 22 காரட் ஆபரண தங்கம் கிராம், 12,200 ரூபாயாகவும், சவரன், 97,600 ரூபாயாகவும் அதிகரித்தது.

கடந்த வாரத்தில் இருந்து தங்கம் விலை குறைந்து வருகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம் தங்கம் கிராம், 11,450 ரூபாய்க்கும், சவரன், 91,600 ரூபாய்க்கும் விற்பனையானது.

நேற்று காலை தங்கம் விலை கிராமுக்கு, 150 ரூபாய் குறைந்து, 11,300 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 1,200 ரூபாய் சரிவடைந்து, 90,400 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

வெள்ளி கிராமுக்கு, 5 ரூபாய் குறைந்து, 165 ரூபாய்க்கு விற்பனையானது.

நேற்று மாலை மீண்டும் தங்கம் விலை கிராமுக்கு, 225 ரூபாய் குறைந்து, 11,075 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு, 1,800 ரூபாய் சரிவடைந்து, 88,600 ரூபாய்க்கு விற்பனையானது.

வெள்ளி விலையில் மாற்றமில்லை. நேற்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு, 3,000 ரூபாய் குறைந்தது. கடந்த, 11 நாட்களில் மட்டும் சவரனுக்கு, 10,000 ரூபாய் சரிவடைந்து உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us