sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

வார தொடக்க முதல்நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,440 அதிகரிப்பு

/

வார தொடக்க முதல்நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,440 அதிகரிப்பு

வார தொடக்க முதல்நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,440 அதிகரிப்பு

வார தொடக்க முதல்நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,440 அதிகரிப்பு

1


ADDED : பிப் 23, 2026 09:58 AM

Google News

1

ADDED : பிப் 23, 2026 09:58 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: சென்னையில் இன்று (பிப்ரவரி 23) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1,440 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 880 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு 180 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 14 ஆயிரத்து 860 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச நிலவரங்களால், சில தினங்களாக, நம் நாட்டில் தங்கம் விலையில் ஏற்ற, இறக்க நிலை காணப்படுகிறது. கடந்த பிப்ரவரி 20ம் தேதி தங்கம் விலை, கிராமுக்கு 80 ரூபாய் குறைந்து, 14,420 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 640 ரூபாய் சரிவடைந்து, 1,15,360 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் 270 ரூபாய்க்கும், ஒரு கிலோ 2 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

நேற்று முன்தினம் பிப்ரவரி 21ம் தேதி ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 2,080 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 440 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு 260 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 14 ஆயிரத்து 680 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை கிராமுக்கு 20 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 290 ரூபாய்க்கும், ஒரு கிலோ 2 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் தங்கம் விலையில் மாற்றமில்லை.

இந்நிலையில் இன்று (பிப்ரவரி 23) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1,440 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 880 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு 180 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 14 ஆயிரத்து 860 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 10 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ.300க்கும், கிலோவுக்கு 10 ஆயிரம் ரூபாய் அதிகரித்து ஒரு கிலோ வெள்ளி ரூ.3 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.






      Dinamalar
      Follow us