ADDED : நவ 28, 2024 10:03 AM

சென்னை: சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று (நவ.,28) சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.56,720க்கும், கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.7,090க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச மார்க்கெட் நிலவரப்படி, தங்கம் விலை ஏற்ற, இறக்கமாக காணப்படும். கடந்த சில தினங்களாக தங்கத்தின் விலையை கணிக்க முடியாத சூழல் நிலவுகிறது. திடீரென்று உயர துவங்குகிறது. சில தினங்களில் தங்கத்தின் விலை சரிய துவங்குகிறது. நேற்று (நவ.,27) தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து, ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.56,840க்கும், ஒரு கிராம் தங்கம் ரூ.25 உயர்ந்து ரூ. 7105க்கும் விற்பனையானது.
இந்நிலையில், இன்று (நவ.,28) சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.56,720க்கும், கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.7,090க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நேற்று சவரனுக்கு ரூ. 200 உயர்வை கண்ட நிலையில், இன்று (நவ.,28) ரூ.120 சரிந்துள்ளது.