தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/தங்கத்தின் விலை மீண்டும் எகிறியது! இரண்டே நாளில் சவரனுக்கு ரூ.720 உயர்வு

தங்கத்தின் விலை மீண்டும் எகிறியது! இரண்டே நாளில் சவரனுக்கு ரூ.720 உயர்வு

தங்கத்தின் விலை மீண்டும் எகிறியது! இரண்டே நாளில் சவரனுக்கு ரூ.720 உயர்வு


UPDATED : டிச 10, 2024 05:46 PM

ADDED : டிச 10, 2024 10:10 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 10, 2024 05:46 PM ADDED : டிச 10, 2024 10:10 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை; சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு அதிரடியாக ரூ.600 உயர்ந்துள்ளது. 2 நாட்களில் மட்டும் ரூ.720 அதிகரித்துள்ளது.

சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப, நாள்தோறும் ஆபரணத் தங்கத்தின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அண்மைக்காலமாக தங்கத்தின் விலையில் அதிரடி மாற்றங்கள் காணப்பட்டன. அதிரடியாக உயர்வதும், பின்னர் சீராக விலை இறங்குவதும் என நிலைமைகள் மாறின.

இந்நிலையில் இன்றைய ஆபரணத் தங்கத்தின் விலையில அதிரடியாக உயர்ந்துள்ளது. சவரனுக்கு ரூ.600 அதிகரித்துள்ளது. ஒரு கிராம் 75 ரூபாய் உயர்ந்து ரூ.7,205 ஆகவும், சவரன் ரூ.57,640 ஆகவும் இருக்கிறது.

இந்த வாரத்தின் 2வது நாளான இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. நேற்றும்(டிச.9), இன்றும்(டிச.10) மட்டும் 720 ரூபாய் தங்கம் விலை அதிகரித்துள்ளது, பெண்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

10 நாட்களில் (நவ.30 முதல் டிச.9) வரை தங்கம் விலை நிலவரம் வருமாறு;

நவ.30 - ரூ.57,200

டிச.1 - ரூ.57,200

டிச.2 - ரூ.56,720

டிச.3 - ரூ.57,040

டிச 4 - ரூ.57,040

டிச. 5 - ரூ.57,120

டிச.6 - ரூ.56,920

டிச.7 - ரூ.56,920

டிச.8 - ரூ.56,920

டிச.9 - ரூ.57,040

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us