மீண்டும் எகிறிய தங்கம் விலை; சவரனுக்கு ரூ.400 உயர்வு
மீண்டும் எகிறிய தங்கம் விலை; சவரனுக்கு ரூ.400 உயர்வு
ADDED : ஆக 26, 2025 09:49 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.400 உயர்ந்துள்ளது.
ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் லேசான ஏற்றம் கண்ட தங்கம் விலை, 2வது வாரத்தில் இறங்குமுகம் கண்டது. கடந்த வாரம் முழுமைக்கும் விலை குறைந்த ஆபரணத் தங்கம் மீண்டும் ஏறத் தொடங்கியது.
இன்றைய நிலவரப்படி தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. சவரனுக்கு ரூ.400 அதிகரித்துள்ளது. ஒரு கிராம் தங்கம் ரூ.9355க்கும், சவரன் ரூ.74,840க்கும் விற்பனையாகிறது. ஒரு கிராம் ரூ. 50 உயர்ந்துள்ளது.
ஆக. 21 முதல் ஆக.25 வரையான விலை நிலவரம்;
ஆக.21 - ரூ.73,840
ஆக.22 -ரூ. 73,720
ஆக.23-ரூ. 74,520
ஆக.24-ரூ.74,520
ஆக. 25-ரூ. 74,440