மீண்டும் எகிறிய தங்கம் விலை! சவரனுக்கு ரூ.480 உயர்வு
மீண்டும் எகிறிய தங்கம் விலை! சவரனுக்கு ரூ.480 உயர்வு
ADDED : டிச 21, 2024 10:31 AM

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 உயர்ந்துள்ளது.
கடந்த அக்டோபர் மாதம் ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டி, பெண்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதன் பின்னர் தங்கம் விலை ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டதால் நகை வாங்க பலரும் ஆர்வம் காட்டினர்.
இந்நிலையில் தங்கத்தின் விலையில் இன்று திடீரென ஏற்றம் காணப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் அதிரடியாக ரூ.480 உயர்ந்து,ரூ. 56,800 ஆக விற்கப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் 60 ரூபாய் அதிகரித்து, ரூ.7,100 ஆக இருக்கிறது.
கடந்த 10 நாட்களில் (டிச. 11 முதல் டிச. 20 வரை) தங்கத்தின் விலை நிலவரத்தை காணலாம்;
டிச. 11 - ரூ. 58,280
டிச.12 - ரூ.58,280
டிச.13 - ரூ. 57,840
டிச.14 - ரூ.57,120
டிச.15 - ரூ. 57,120
டிச. 16 - ரூ. 57, 120
டிச.17 - ரூ. 57,120
டிச.18 - ரூ.57,080
டிச.19 - ரூ. 56,500
டிச. 20 - ரூ.56,320