ஆபரணத் தங்கம் ஒரே நாளில் இருமுறை உயர்வு; சவரன் ரூ.1600 அதிகரிப்பு
ஆபரணத் தங்கம் ஒரே நாளில் இருமுறை உயர்வு; சவரன் ரூ.1600 அதிகரிப்பு
UPDATED : நவ 19, 2025 06:41 PM
ADDED : நவ 19, 2025 05:41 PM

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையில் இன்று இருமுறை மாற்றம் காணப்பட்டது. காலையிலும், மாலையில் சவரனுக்கு தலா 800 ரூபாய் என ஒரே நாளில் ரூ.1600 அதிகரித்தது.
ஆபரணத் தங்கத்தின் விலையில் கடந்த சில வாரங்களாக ஏற்ற, இறக்கங்கள் காணப்பட்டு வருகிறது. ஒரே நாளில் இருமுறை விலை ஏறுவதும், பின்னர் இறங்குவதுமாக விலை நிலவரம் இருந்து வந்தது.
இந் நிலையில், இன்றும் ஆபரணத் தங்கம் இருமுறை விலை உயர்ந்தது. காலையில், வர்த்தக நேரத்தில் ஒரு கிராம் தங்கம் ரூ.100 உயர்ந்து, ரூ.11,500 ஆக விற்பனையானது. சவரன் ரூ. 92,000 ஆக இருந்தது.
மாலையில் மீண்டும் தங்கம் விலையில் மாற்றம் நிலவியது. அதன்படி, சவரனுக்கு ரூ.800ம், கிராமுக்கு ரூ.100ம் என விலையேற்றம் இருந்தது. ஒரு கிராம் தங்கம் ரூ. 11,600 ஆக விற்பனையானது. சவரன் ரூ.92,800க்கு விற்பனையானது.
தங்கத்தை போன்றே வெள்ளி விலையிலும் மாற்றம் காணப்பட்டது. மாலை நேர வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.3ம், கிலோவுக்கு ரூ.3 ஆயிரமும் அதிகரித்து விற்பனையானது. ஒரு கிராம் வெள்ளி ரூ.176 ஆகவும், கிலோ ரூ.1 லட்சத்து 76 ஆயிரமாகவும் இருந்தது.

