ஆண்டின் கடைசி நாளில் தங்கம் விலை சரிவு! சவரன் ரூ.320 அதிரடி குறைவு
ஆண்டின் கடைசி நாளில் தங்கம் விலை சரிவு! சவரன் ரூ.320 அதிரடி குறைவு
ADDED : டிச 31, 2024 09:54 AM

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது.
சர்வதேச அளவில் நிலவும் பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் காரணமாக ஆபரணத் தங்கத்தின் விலையில் மாற்றம் நிகழ்கிறது. அந்த வகையில் இந்தாண்டின் கடைசி மாதத்தின் கடைசி நாளான இன்று (டிச.31) தங்கம் விலையில் மாற்றம் காணப்படுகிறது.
அதன்படி, ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. ஒரு சவரன் தங்கம் ரூ.56,880க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ. 40 குறைந்து ரூ.7,110 ஆக இருக்கிறது.
கடந்த 10 நாட்களில் (டிச.21 முதல் டிச.30) தங்கம் விலை நிலவரத்தைக் காணலாம்;
டிச.21 - ரூ. 56,800
டிச.22 - ரூ. 56,800
டிச. 23 - ரூ. 56,080
டிச. 24 - ரூ.56,720
டிச.25 - ரூ. 56,800
டிச.26 - ரூ. 57, 000
டிச.27 - ரூ.57,200
டிச.28 - ரூ.57,080
டிச.29 - ரூ.57,080
டிச.30 - ரூ. 57,200