தங்கம் விலையில் திடீர் மாற்றம்! சவரனுக்கு ரூ.120 குறைவு
தங்கம் விலையில் திடீர் மாற்றம்! சவரனுக்கு ரூ.120 குறைவு
ADDED : டிச 18, 2024 10:25 AM

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையில் இன்று சற்று மாற்றம் காணப்படுகிறது.
ஆபரணத் தங்கத்தின் விலையில் அவ்வப்போது ஏற்பட்டு வந்த மாற்றம் நகை பிரியர்களுக்கு அதிர்ச்சியை அளித்து வந்தது. தற்போது கிறிஸ்துமஸ் கொண்டாட்டம், புது வருட பிறப்பு ஆகிய காரணங்களால் தங்கத்தில் முதலீடு செய்ய காத்திருந்தவர்களும் யோசிக்க ஆரம்பித்தனர்.
இந் நிலையில், இன்று ஆபரணத் தங்கத்தின் விலையில் இன்று மாற்றம் காணப்படுகிறது. இன்றைய விலை நிலவரப்படி ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 120 ரூபாய் குறைந்துள்ளது.
அதன் படி ஒரு கிராம் ரூ.15 குறைந்து, ரூ.7,135 ஆக இருக்கிறது. சவரன் 120 ரூபாய் குறைந்து ரூ.57,080 ஆக விற்பனையாகிறது.
கடந்த 10 நாட்களாக(டிச.8 முதல் டிச.17) நிலவிய தங்கம் விலை விவரம் வருமாறு;
டிச.8 - ரூ.56,920
டிச.9 - ரூ.57,040
டிச.10 - ரூ.57,640
டிச.11 - ரூ. 58,280
டிச. 12 - ரூ.58,280
டிச. 13 - ரூ. 57,840
டிச.14 - ரூ. 57,120
டிச.15 - ரூ. 57,120
டிச.16 - ரூ. 57,120
டிச.17 - ரூ. 57,200