ADDED : மார் 05, 2024 11:47 PM
சென்னை:தமிழகத்தில் நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம் கிராம், 5,930 ரூபாய்க்கும்; சவரன், 47,440 ரூபாய்க்கும் விற்பனையானது. கிராம் வெள்ளி, 77 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், எப்போதும் இல்லாத வகையில் நேற்று, கிராம் தங்கம் விலை 85 ரூபாய் உயர்ந்து, 6,015 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 680 ரூபாய் அதிகரித்து, 48,120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
இதுகுறித்து, சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி கூறியதாவது:
அமெரிக்காவின் வர்த்தகம், வேலைவாய்ப்பு, ஏற்றுமதி தொடர்பான குறியீடுகள் சாதகமாக வரவில்லை. இதனால், உலக முதலீட்டாளர்கள் பங்கு சந்தைகளில் முதலீடு செய்வதை தவிர்த்து, தங்கத்தில் அதிகளவில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே, உலக சந்தையில் தங்கம் விலை உயர்ந்துள்ளதால், உள்நாட்டிலும் அதன் விலை அதிகரித்துள்ளது. இன்னும், சில நாட்களுக்கு தங்கம் விலை உச்சத்தை தொடும்.
அதற்கு பின்தான், தங்கம் விலை குறையுமா அல்லது உயருமா என, எந்த திசையில் பயணிக்கும் என்பது தெரியவரும்.
இவ்வாறு அவர் கூறினார்.

