உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : மே 29, 2026 01:22 AM

அ நிறம் | அளவு
சென்னை: தமிழகத்தில் நேற்று தங்கம் விலை, சவரனுக்கு 1,200 ரூபாய் குறைந்தது.
சர்வதேச நிலவரங்களால், நம் நாட்டில் சில தினங்களாக, தங்கம், வெள்ளி விலை குறைந்து வருகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம் கிராம், 14,650 ரூபாய்க்கும், சவரன், 1,17,200 ரூபாய்க்கும் விற்பனையானது.
வெள்ளி கிராம், 290 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
நேற்று தங்கம் விலை கிராமுக்கு, 150 ரூபாய் குறைந்து, 14,500 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 1,200 ரூபாய் சரிவடைந்து, 1,16,000 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு ஐந்து ரூபாய் குறைந்து, 285 ரூபாய்க்கு விற்பனையானது. கிலோவுக்கு, 5,000 ரூபாய் சரிவடைந்து, 2.85 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டது.
