ஆபரணத் தங்கத்தின் விலையில் புதிய உச்சம்; சவரனுக்கு ரூ.720 உயர்வு
ஆபரணத் தங்கத்தின் விலையில் புதிய உச்சம்; சவரனுக்கு ரூ.720 உயர்வு
ADDED : செப் 09, 2025 09:43 AM

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.720 அதிகரித்துள்ளது. ஒரு சவரன் ரூ. 81,200 ஆக இருக்கிறது.
அண்மைக் காலங்களாக ஆபரணத் தங்கத்தின் விலை உச்சத்தை நோக்கி சென்று வருகிறது. தொடர்ந்து உயருவதும், பின்னர் ஏதோ ஒரு நாளில் மெல்ல குறைவதுமாக தங்கத்தின் விலை இருந்தது. நேற்றைய தினம் தங்கம் கொஞ்சம் குறைந்து, பின்னர் மீண்டும் எகிறியது.
இந் நிலையில் இன்று மீண்டும் ஆபரணத் தங்கத்தின் விலை உச்சத்தைத் தொட்டுள்ளது. ஒரு சவரன் ரூ.720 அதிகரித்துள்ளது. ஒரு கிராம் ரூ.10,150 ஆகவும், சவரன் ரூ.81,200 ஆகவும் விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ.90 உயர்ந்துள்ளது.
கடந்த 24 மாதங்களில் தங்கத்தின் விலை கிட்டத்தட்ட இருமடங்காக அதிகரித்துள்ளது. 2025ம் ஆண்டு இது 36 சதவீதம் அதிகரித்து இருக்கிறது.
இப்போதைய சூழலில் தங்கத்தின் விலை ஏறுமுகத்தில் இருந்தால் இந்த ஆண்டு இறுதிக்குள் ஒரு சவரன் விலை ரூ.1 லட்சத்தை எட்டும் என்று வர்த்தகர்களும், பொருளாதார ஆலோசகர்களும் தெரிவித்து இருக்கின்றனர்.