sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 தங்கம் சவரன் ரூ.1.20 லட்சம் வெள்ளி கிலோ ரூ.3.75 லட்சம்

/

 தங்கம் சவரன் ரூ.1.20 லட்சம் வெள்ளி கிலோ ரூ.3.75 லட்சம்

 தங்கம் சவரன் ரூ.1.20 லட்சம் வெள்ளி கிலோ ரூ.3.75 லட்சம்

 தங்கம் சவரன் ரூ.1.20 லட்சம் வெள்ளி கிலோ ரூ.3.75 லட்சம்


ADDED : ஜன 27, 2026 07:08 AM

Google News

ADDED : ஜன 27, 2026 07:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தமிழகத்தில் நேற்று ஒரே நாளில், வெள்ளி கிலோவுக்கு 10,000 அதிகரித்து, 3.75 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டது. ஆபரண தங்கம் சவரனுக்கு 2,200 உயர்ந்து, 1,20,200 ரூபாய்க்கு விற்பனையானது.

அமெரிக்க அதிபர் டிரம்பின் நடவடிக்கையால், பல நாடுகளின் பொருளாதாரம் பாதிக்கப்படும் சூழல் உருவாகி உள்ளது.

எனவே, சர்வதேச முதலீட்டாளர்கள், பாதுகாப்பு கருதி, தங்கம், வெள்ளியில் அதிக அளவில் முதலீடு செய்கின்றனர். இதனால், சர்வதேச சந்தையில் தங்கம், வெள்ளி விலைகள் உயர்ந்துள்ளன.

நம் நாட்டில் எப்போதும் இல்லாத வகையில், தங்கம், வெள்ளி விலைகள், தினமும் புதிய உச்சத்தை எட்டி வருகின்றன.

தமிழகத்தில் கடந்த சனிக்கிழமை, 22 காரட் ஆபரண தங்கம் கிராம் 14,750 ரூபாய்க்கும், சவரன் 1,18,000 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 365 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை தங்கம் சந்தைக்கு விடுமுறை. அன்று, முந்தைய நாள் விலையிலேயே ஆபரணங்கள் விற்பனையாகின. நேற்று, தங்கம் விலை கிராமுக்கு 275 உயர்ந்து, 15,025 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

சவரனுக்கு 2,200 அதிகரித்து, 1,20,200 ரூபாய்க்கு விற்பனையானது. வெள்ளி கிராமுக்கு 10 உயர்ந்து, 375 ரூபாய்க்கு விற்கப்பட்டது. கிலோவுக்கு 10,000 அதிகரித்து, 3.75 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.






      Dinamalar
      Follow us