ADDED : ஜூன் 11, 2025 11:37 PM
சென்னை:ஜி.ஆர்.டி., ஜுவல்லர்ஸ், 'கோல்டன் லெவன் பிளக்ஸி' என்ற பெயரில் சிறப்பான நகை வாங்கும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
இதில் வாடிக்கையாளர்கள், மாதந்தோறும் செலுத்தும் பணத்திற்கு, 11 மாதங்களில், அவர்களுக்கு பிடித்த நகையை வாங்கலாம். முக்கிய சிறப்பம்சம், 18 சதவீதம் வரை சேதாரம் இல்லை. தங்கம் விலையில் ஏற்ற, இறக்க மாற்றங்கள் அதிகம் இருக்கும் நிலையில், ஜி.ஆர்.டி., கோல்டன் லெவன் பிளக்ஸி திட்டம் பயனுள்ள தீர்வை வழங்குகிறது.
இத்திட்டத்தில் வாடிக்கையாளர்கள், ஒவ்வொரு மாதமும் முன்பணம் சேமித்து, 11 மாதங்களுக்கு பின், எடை அடிப்படையில் அல்லது மதிப்பு அடிப்படையில் என, இரு விருப்பத்தில் எது, அவர்களுக்கு லாபகரமாக தோன்றுகிறதோ, அதை தேர்வு செய்து நகை வாங்கலாம்.
தங்கம், வைரம், பிளாட்டினம், வெள்ளி என, எதுவாக இருந்தாலும், மக்கள் முன்கூட்டியே திட்டமிட்டு, பின் தங்களுக்கு விருப்பமான நகைகளை வாங்கலாம்.
ஜி.ஆர்.டி., ஜுவல்லர்ஸின் இயக்குநர் ஜி.ஆர். 'அனந்த்' ஆனந்தபத்மநாபன் கூறியதாவது:
வாடிக்கையாளர்கள் விருப்பப்பட்டு, திட்டமிட்டு வாங்க உதவும் வகையில், கோல்டன் லெவன் பிளக்ஸி திட்டம் வடிவமைக்கப்பட்டு உள்ளது. 1,000 ரூபாயில் இருந்து, மாதாந்திர முன்பண திட்டத்தை துவக்கலாம். குறுகிய காலத்திற்குள் பெரும் பலனை அனுபவிக்க, 11 மாத தவணைகளை செலுத்தினால் போதுமானது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஜி.ஆர்.டி., ஜுவல்லர்ஸின் நிறுவன மேலாளர் ஜி.ஆர்.ராதாகிருஷ்ணன் கூறுகையில், 'இது ஒரு சாதாரண தங்க சேமிப்பு திட்டம் அல்ல.
'இது, பெருமை மற்றும் பாரம்பரிய உணர்வை, அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் ஒரு வழித்தடம். உதாரணமாக, ஒரு வாடிக்கையாளர் அவரது நெருக்கமானவரின் பிறந்தநாளில் அவரை ஆச்சரியப்படுத்த விரும்பினால், அந்த தினத்தை நோக்கி திட்டமிட்டு, திட்டத்தை துவக்கலாம்,'' என்றார்.

