அரசு மருத்துவமனைக்கு நல்லகண்ணு பெயர்; முதல்வர் ஸ்டாலின் உத்தரவு
அரசு மருத்துவமனைக்கு நல்லகண்ணு பெயர்; முதல்வர் ஸ்டாலின் உத்தரவு
ADDED : டிச 26, 2024 12:52 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: துாத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தி நல்லகண்ணுவின் பெயர் சூட்டப்படும் என 100வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.
இது குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருவைகுண்டம் அரசு மருத்துவமனையை சி.டி.ஸ்கேன் வசதியுடன் தரம் உயர்த்தி, கூடுதல் வசதிகளுடன் புதிய மருத்துவமனைக் கட்டடம் அமைக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.
கடந்த 85 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் பணியையே எப்போதும் தனது தலையாயக் கடமையாகக் கொண்டு செயல்பட்டு வரும் நல்லகண்ணு பெருமையைப் போற்றும்வகையில், திருவைகுண்டத்தில் அமையவிருக்கும் புதிய மருத்துவமனைக் கட்டடத்திற்கு 'தோழர் நல்லகண்ணு நூற்றாண்டுக் கட்டடம்” எனப் பெயரிடப்படும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.