ADDED : அக் 04, 2025 01:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:தமிழக அரசின், 'டாஸ்மாக்' நிறுவனத்தின் சில்லரை கடைகளில், பீர் மற்றும் மது வகைகள் விற்கப்படுகின்றன. இவற்றில் தினமும் சராசரியாக, 150 கோடி ரூபாய்க்கும், விடுமுறை நாட்களில், 200 கோடி ரூபாய்க் கும் மதுபானங்கள் விற்பனையாகின்றன.
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, நேற்று முன்தினம் மது கடைகளுக்கு விடுமுறை.
இதனால், அதற்கு முந்தைய நாளான ஆயுத பூஜை அன்று, மது கடைகளை திறந்தது முதல் மது வகைகளை வாங்க, வாடிக்கையா ளர்கள் படையெடுத்தனர். கடைகளில் கூட்டம் அலைமோதியது.
இதனால், அன்று ஒரே நாளில், 240 கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளன.