'கூகுள் பிக்ஸல் 9 ஏ' புதிய மாடல் சுப்ரீம் மொபைல்சில் அறிமுகம்
'கூகுள் பிக்ஸல் 9 ஏ' புதிய மாடல் சுப்ரீம் மொபைல்சில் அறிமுகம்
ADDED : ஏப் 20, 2025 01:58 AM

சென்னை:சென்னை, தாம்பரம் மார்க்கெட் ரோடு கார்னர் அருகே, சுப்ரீம் மொபைல்ஸ் நிறுவன கிளையில், 'கூகுள் பிக்ஸல் 9 ஏ' புதிய மாடல் அறிமுக விழா நடந்தது.
சிறப்பு அழைப்பாளர்களாக, 'ரேடிங்க்டன்' பிரதேச விற்பனை மேலாளர்கள் மனோஜ் மற்றும் பாலாஜி, 'ப்ரோமேட்' தேசிய விற்பனை தலைவர் கோபால், சுப்ரீம் மொபைல்ஸ் பிராந்திய விற்பனை மேலாளர் அருள்ஜோதி ஆகியோர் பங்கேற்றனர்.
பிக்ஸல் 9ஏ ஸ்மார்ட் போனில், '6.3 இன்ச் ஆக்டுவர் டிஸ்ப்ளே' கொண்டுள்ளது. 'ஓ.எல்.இ.டி., டிஸ்ப்ளே'வில், 120 ஹெர்ட்ஸ் வரை புதுப்பிப்பு வீதத்துடன் உள்ளது. கார்னிங் கொரில்லா கிளாஸ், பாதுகாப்பு அரணாக உள்ளது.
இதில், 'ஓ.ஐ.எஸ்., மற்றும் 8 எக்ஸ் ஜூம்' கொண்ட, 48 மெகா பிக்ஸல் கேமரா மற்றும், 120 டிகிரி பார்வை புலத்துடன் கூடிய, 13 மெகா பிக்ஸல் அல்ட்ரா வைட் கேமரா; முன்பக்கம், 96.1 டிகிரி அல்ட்ராவைட், 13 மெகா பிக்ஸல் செல்பி கேமரா ஆகியவை உள்ளன. மேலும், 5,100 எம்.ஏ.எச்., பேட்டரி, ஆன்ட்ராய்டு 15ல் இயங்குகிறது. துாசி மற்றும் நீர் எதிர்ப்பை தாங்கும் திறன் கொண்டது.
மேஜிக் எடிட்டர், மேஜிக் எரேசர் போன்ற சில ஏ.ஐ., தொழில்நுட்ப அம்சங்களும் இடம் பெற்றுள்ளன. கூகுள் டென்சர் ஜி4 சிப்செட்டுடன் விற்பனைக்கு வந்துள்ளது.
இந்த சிப்செட்டில், மேம்பட்ட செயல்திறன் மற்றும் 'டைட்டன் எம்2 செக்யூரிட்டி சிப்' வசதியும் உள்ளது.இதில், 8 ஜிபி., ரேம் மற்றும் 128 ஜிபி., மெமரி கொண்ட கூகுள் 9ஏ போனின் விலை, 49,999 ரூபாய்.
இந்த மாடலை சுப்ரீம் மொபைல்ஸில், 1,499 ரூபாய் முதல் மாத தவணையில் வாங்க முடியும். 24 மாத தவணை, கட்டணமில்லா இ.எம்.ஐ., வசதி, எச்.டி.எப்.சி., கார்டுதாரர்களுக்கு, 5 சதவீதம் ஆபர் உள்ளிட்ட சலுகைகள் உள்ளன.
மேலும், விபரம் அறிய 98587 98587 என்ற எண்ணுக்கு, 'Hi' என வாட்ஸாப் செய்தால், அனைத்து தகவல்களையும் அவரவர் மொபைல் போன் வாயிலாகவே தெரிந்து கொள்ளலாம் என, சுப்ரீம் மொபைல்ஸ் நிறுவனத்தினர் கூறினர்.

