ADDED : மார் 18, 2025 04:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தனியார் பெயரில் உள்ள சிறிய அளவிலான நிலங்களுக்கு, உட்பிரிவு பட்டா வழங்குவது முதல், பெரிய திட்டங்களுக்காகவும் நிலங்கள் அளக்கப்படுகின்றன. பெரிய நிலப்பரப்பு, மலைப்பகுதிகள், நீர்நிலைகள் போன்ற இடங்களை அளப்பதில், நடைமுறை பிரச்னைகள் உள்ளன.
நிலங்களை ஒட்டுமொத்தமாக அளக்கவும், மறு அளவை பணிகள் மேற்கொள்ளவும், ட்ரோன் எனப்படும் ஆளில்லா சிறிய விமானங்களை பயன்படுத்த, நில அளவை துறை முடிவு செய்தது. இதற்காக, முதற்கட்டமாக, ஐந்து ட்ரோன்கள் வாங்க, அரசு ஒப்புதல் அளித்து உள்ளது.