sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மின்சார பஸ்களுக்கு கட்டமைப்பு வசதி ஆம்னி உரிமையாளர்களுக்கு அரசு உறுதி

/

மின்சார பஸ்களுக்கு கட்டமைப்பு வசதி ஆம்னி உரிமையாளர்களுக்கு அரசு உறுதி

மின்சார பஸ்களுக்கு கட்டமைப்பு வசதி ஆம்னி உரிமையாளர்களுக்கு அரசு உறுதி

மின்சார பஸ்களுக்கு கட்டமைப்பு வசதி ஆம்னி உரிமையாளர்களுக்கு அரசு உறுதி


ADDED : ஜூன் 26, 2025 12:34 AM

Google News

ADDED : ஜூன் 26, 2025 12:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:மாநில அரசு போக்குவரத்து கழகங்கள், அதிகளவில் மின்சார பஸ்களை இயக்கவும், அதற்கான, 'சார்ஜிங்' மையங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தவும், பிரதமரின் 'இ - டிரைவ்' திட்டத்தை, மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.

இத்திட்டத்தின் கீழ், 11,000 கோடி ரூபாயும், சார்ஜிங் வசதி போன்ற கட்டமைப்புகள் ஏற்படுத்த, 2,000 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, பிற மாநிலங்கள் இந்த திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற்று, தனி நிறுவனம் துவக்க, மின்சார வாகனங்கள் இயக்கத்தை அதிகரித்து வருகின்றன.

தமிழகத்தில் பிரதமரின் இ - டிரைவ் திட்டத்தில், ஒரு ரூபாய்கூட இதுவரை பெறப்படவில்லை என்றும், மின்சார வாகனங்கள் இயக்குவதற்கான கட்டமைப்பு வசதிகள் இல்லை என்றும், நமது நாளிதழில், கடந்த 24ம் தேதி செய்தி வெளியிடப்பட்டது.

அதையடுத்து, தமிழக அரசு உத்தரவுப்படி, ஆம்னி பஸ் உரிமையாளர்களுடன் சென்னையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.

'சார்ஜிங்' வசதிகள்


மாநகர போக்குவரத்து கழக நிர்வாக இயக்குநர் பிரபுசங்கர், தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழக நிர்வாக இயக்குநர் அனீஷ் உள்ளிட்ட அதிகாரிகளும், ஆம்னி பஸ் உரிமையாளர்கள் தரப்பில் அன்பழகன், சுனில்குமார் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

மின்சார பஸ்கள் இயக்குவது குறித்தும், சென்னை, திருச்சி, மதுரை, கோவை நகரங்களிலும், நெடுஞ்சாலை சந்திப்புகளிலும் 'சார்ஜிங்' வசதிகள் ஏற்படுத்துவது குறித்தும் பேசப்பட்டது.

அனைத்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்க தலைவர் அன்பழகன் கூறியதாவது:

எரிபொருள் செலவு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நீண்டகால செலவு குறைவு என்பதால், மின்சார வாகனங்கள் இயக்க ஆர்வமாக உள்ளோம். அதற்கான கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும் என, அறிவுறுத்தினோம்.

சென்னையில் கிளாம்பாக்கம், மாதவரம், புதிதாக வர உள்ள குத்தம்பாக்கம் பஸ் நிலையங்கள்; கோவை, திருச்சி, மதுரை, சேலம், விருதுநகர், கரூர், கடலுார், கிருஷ்ணகிரி உள்ளிட்ட நகர பஸ் நிலையங்கள் மற்றும் நெடுஞ்சாலை பகுதிகள் என, 18 இடங்களை தேர்வு செய்து, அங்கு சார்ஜிங் உள்ளிட்ட அனைத்து கட்டமைப்பு வசதிகளை செய்யுமாறு கேட்டுள்ளோம்.

அதிகாரிகள் உறுதி


மேலும், சார்ஜிங் மையங்கள் அமைப்பதற்காக, தமிழக அரசுக்கு செலுத்த வேண்டிய கட்டணத்தை குறைக்கவும் வலியுறுத்தி உள்ளோம். எங்களின் கோரிக்கை ஏற்கப்படுவதோடு, மின்சார பஸ்கள் இயக்குவதற்கான கட்டமைப்பு மற்றும் சார்ஜிங் வசதிகளை ஏற்படுத்தவும், அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us