தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/அரசு பஸ்சை சிறைபிடித்து மறியல்

அரசு பஸ்சை சிறைபிடித்து மறியல்

அரசு பஸ்சை சிறைபிடித்து மறியல்


UPDATED : நவ 07, 2026 07:51 PM

ADDED : நவ 07, 2026 07:47 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 07, 2026 07:51 PM ADDED : நவ 07, 2026 07:47 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அரியலுார்: அரியலுார் அருகே, பஸ்சை சிறைப்பிடித்து, பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

அரியலுார் மாவட்டம், வஞ்சினபுரம் கிராமம் வழியாக இரண்டு அரசு பஸ்கள் மட்டுமே இயக்கப்படுவதாகவும், சில மாதங்களாக அவையும் முறையாக இயக்கப்படுவதில்லை எனவும் கூறப்படுகிறது.

குறிப்பாக, காலை நேரத்தில் வரும் பஸ்கள் மாணவர்களை ஏற்றாமல் நிற்காமல் செல்வதால், அவர்கள் குறித்த நேரத்தில் பள்ளி, கல்லுாரிகளுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வேலைக்கு செல்லும் தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

ஆத்திரமடைந்த பொதுமக்கள் வஞ்சினபுரம் கிராமம் வழியாக வந்த அரசு பஸ்சை வழிமறித்து சிறைப்பிடித்தனர். தொடர்ந்து, பஸ் முன் சாலையில் அமர்ந்து ஒரு மணி நேரத்துக்கும் மேலாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அங்கு வந்த போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, பஸ்கள் உரிய நேரத்தில் இயக்கப்படுவதுடன், கிராமத்தில் நின்று செல்லவும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததால் போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us