ADDED : மார் 12, 2024 12:53 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி: திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில், புதிய மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தை, நேற்று அமைச்சர் சிவசங்கரன் திறந்து வைத்தார். பின், அவர் கூறியதாவது:
தமிழகத்தில், 10 ஆண்டு அ.தி.மு.க., ஆட்சியில் வாங்கிய பஸ்கள், முறையாக பராமரிக்கப்படாததால், 7,000 பஸ்கள், 'டப்பா' பஸ்களாக மாறியுள்ளன. ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்ற பின், கடந்தாண்டு, 4,000 புதிய பஸ்கள் வாங்க டெண்டர் விடப்பட்டு, முதல்கட்டமாக, 100 பஸ்களை துவக்கி வைத்து. மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளார்.
கடந்த மாதம் நடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில், 3,000 புதிய பஸ்கள் வாங்க நிதி ஒதுக்கீடு செய்து, டெண்டரும் விடப்பட்டது. விரைவில், 7,000 புதிய பஸ்கள் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

