உள்ளடக்கத்திற்கு செல்ல
UPDATED : அக் 21, 2026 08:10 PM
ADDED : அக் 21, 2026 08:07 PM
அ நிறம் | அளவு
சென்னை: தமிழக அரசின் மின் ஆய்வு துறையின் தலைமை மின் ஆய்வாளராக இருந்த ராமகிருஷ்ணன், ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் மின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான முதன்மையான பணியை, மின் ஆய்வு துறை மேற்கொள்கிறது.
இந்நிறுவனம், ‘லிப்ட், எக்ஸ்லேட்டர்’ அமைக்க அனுமதி வழங்குவது, அடுக்குமாடி கட்டடங்கள், சினிமா தியேட்டர்களை ஆய்வு செய்து அனுமதி வழங்குவது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்கிறது.
இது, அரசு தலைமை மின் ஆய்வாளர் தலைமையின் கீழ் செயல்படுகிறது. இந்நிலையில், தற்போதுள்ள தலைமை மின் ஆய்வாளர் ராமகிருஷ்ணன் என்பவரை, ‘சஸ்பெண்ட்’ செய்து, அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்பதவியில் பொறுப்பு அதிகாரியாக செல்வம் நியமிக்கப்பட்டுள்ளார்.
