sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கைவிடப்பட்ட குவாரிகளை நீர்நிலையாக்க அரசு முடிவு மதுக்கரைக்கு ரூ.10 கோடி ஒதுக்கீடு

/

கைவிடப்பட்ட குவாரிகளை நீர்நிலையாக்க அரசு முடிவு மதுக்கரைக்கு ரூ.10 கோடி ஒதுக்கீடு

கைவிடப்பட்ட குவாரிகளை நீர்நிலையாக்க அரசு முடிவு மதுக்கரைக்கு ரூ.10 கோடி ஒதுக்கீடு

கைவிடப்பட்ட குவாரிகளை நீர்நிலையாக்க அரசு முடிவு மதுக்கரைக்கு ரூ.10 கோடி ஒதுக்கீடு


ADDED : ஜூலை 09, 2025 10:19 PM

Google News

ADDED : ஜூலை 09, 2025 10:19 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:'தமிழகத்தில் கைவிடப்பட்ட சுண்ணாம்புக்கல் குவாரிகளை, நீர்த்தேக்கமாக மாற்றும் பணி, 10 கோடி ரூபாயில் துவக்கப்பட்டுள்ளது' என, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழகத்தில் கட்டுமானப் பணிக்கான கருங்கல், கிரானைட், சிமென்ட் தயாரிப்பதற்கான சுண்ணாம்புக்கல் போன்றவை, குவாரி அமைத்து எடுக்கப்படுகின்றன.

கனிமவளத் துறை அனுமதி பெற்று, கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு, குவாரிகள் செயல்பட வேண்டும். குறிப்பிட்ட ஆண்டுகள் கடந்த நிலையில், கைவிடப்பட்ட குவாரிகளை முறையாக மண் கொட்டி மூட வேண்டும்.

ஆனால், குவாரி உரிமம் பெறும் நிறுவனங்கள், மண் கொட்டி மூடும் பணிகளை முறையாக செய்வதில்லை. இத்தகைய குவாரிகளை நீர்நிலையாக மாற்றினால், அந்தந்த பகுதி மக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யலாம் என கருதப்படுகிறது.

இதற்கான பணிகளை, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அதிகாரிகள் துவக்கியுள்ளனர்.

இதுகுறித்து, சுற்றுச்சூழல் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

கோவை மாவட்டம் மதுக்கரை பகுதியில், 'ஏசிசி சிமென்ட்' நிறுவனத்துக்கு சுண்ணாம்புக்கல் வெட்டி எடுக்க, 1964ல், 161 ஏக்கர் நிலத்தில் குவாரி அமைக்க அனுமதிக்கப்பட்டது. இங்கு சுண்ணாம்புக்கல் வெட்டி எடுக்கும் பணிகள், 2024ல் நிறுத்தப்பட்டன.

இனி பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள இந்த குவாரியை நீர்நிலையாக மாற்ற திட்டமிட்டு இருக்கிறோம். இங்கு நீர்த்தேக்கம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருகிறோம். இது தொடர்பான பணிகளுக்கு முதற்கட்டமாக, 10 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

அரியலுார் மாவட்டம் கீழப்பழவூர் கிராமத்தில், 'செட்டிநாடு சிமென்ட்ஸ்' நிறுவனத்துக்கு சுண்ணாம்புக்கல் எடுக்க அனுமதிக்கப்பட்ட குவாரியும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.

உள்ளூர் மக்கள் கோரிக்கை அடிப்படையில், அந்த குவாரியையும் நீர்நிலையாக மாற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்படுகின்றன. இதேபோல், பிற மாவட்டங்களிலும் கைவிடப்பட்ட குவாரிகள் குறித்த விபரங்கள் திரட்டப்படுகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

ரூ.10 கோடி ஏன்?


இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:கோவை மதுக்கரை பகுதியில் கைவிடப்பட்ட சுண்ணாம்புக்கல் குவாரியை மறுசீரமைத்து நீர்நிலையாக்க, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப் படுகிறது. இதற்காக தமிழக அரசு, 10 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது. இதை பயன்படுத்தி, மதுக்கரை சுண்ணாம்புக்கல் குவாரி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மண்வள பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்குவாரியின் மையப்பகுதி நீர்நிலையாக மாற்றப்படும். இங்கு, பல்லுயிர் பெருக்க பாதுகாப்புக்கான பணிகள் மேற்கொள்ளப்படும்.
இதைச் சுற்றியுள்ள காலி நிலங்களில் பூங்கா அமைக்கப்படும். மக்கள் வந்து செல்ல தேவையான வசதிகள் ஏற்படுத்தப்படும். உள்ளூர் மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக் கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.








      Dinamalar
      Follow us