sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தரக்குறைவாக நடத்தும் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள்; நடவடிக்கை கோரி அரசு டாக்டர்கள் போராட்டம்

/

தரக்குறைவாக நடத்தும் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள்; நடவடிக்கை கோரி அரசு டாக்டர்கள் போராட்டம்

தரக்குறைவாக நடத்தும் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள்; நடவடிக்கை கோரி அரசு டாக்டர்கள் போராட்டம்

தரக்குறைவாக நடத்தும் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள்; நடவடிக்கை கோரி அரசு டாக்டர்கள் போராட்டம்


ADDED : நவ 26, 2024 02:32 AM

Google News

ADDED : நவ 26, 2024 02:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தரக்குறைவாக நடத்தும் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, அரசு டாக்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், அரசு பணிகளையும் புறக்கணித்துள்ளனர்.

சென்னையில் தேசிய நலவாழ்வு அலுவலகத்தில் நடந்த, மக்கள் நல்வாழ்வு துறை ஆய்வு கூட்டத்தில், ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஒருவர், மருத்துவ துறை உயர் அதிகாரிகளையும், டாக்டர்களையும் தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது.

அதேபோல், திருச்சி, விருதுநகர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, தர்மபுரி, திருப்பத்துார் மாவட்ட கலெக்டர்களும், அரசு டாக்டர்களை குற்றவாளிகள் போல் நடத்துவதாக, அரசு டாக்டர்கள் சங்கத்தினர் குற்றஞ்சாட்டினர்.

தரக்குறைவாக நடத்தும் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை கண்டித்து, அரசு டாக்டர்கள் சங்க கூட்டமைப்பினர், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பின், கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பாலகிருஷ்ணன் கூறியதாவது:

அரசு டாக்டர்களை தரக்குறைவாக நடத்துவதையும், ஒருமையில் பேசுவதையும், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் கைவிட வேண்டும். 80,000 டாக்டர்கள் பணியாற்ற வேண்டிய இடத்தில், 23,000 டாக்டர்கள் தான் பணியாற்றி வருகிறோம். பிரசவம் நடக்கும் அரசு மருத்துவமனைகளிலும் டாக்டர்கள் பற்றாக்குறை உள்ளது.

மகப்பேறு மருத்துவமனையில், ஏழு பேர் பணியாற்ற வேண்டிய இடத்தில், ஓரிருவர் 24 மணி நேரமும் தொடர்ந்து பணியாற்றி அவதிப்பட்டு வருகின்றனர்.

இப்படி இருக்கையில் ஒரு மரணம் நடந்தால் கூட, அந்த டாக்டர் தான் பொறுப்பேற்க வேண்டும் என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. மருத்துவ துறையை கட்டமைக்க நினைத்தால் கூடுதலாக, 20,000 டாக்டர்கள் நியமிக்கப்பட வேண்டும்.

மேலும், நோயாளிகள் - டாக்டர்களுக்கான ஆலோசனையை நீட்டிக்க, அவசரகால சிகிச்சையை தவிர, சிறப்பு மருத்துவ சிகிச்சைக்கு, முன்பதிவு முறை அமல்படுத்த வேண்டும். எங்கள் கோரிக்கை ஏற்காத வரை, உயர் அதிகாரிகளின் கூட்டங்களில், டாக்டர்கள் பங்கேற்க மாட்டார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

முதல்வருக்கு கடிதம்!

அரசு டாக்டர்களை உயர் அதிகாரிகள் துன்புறுத்தி வருகின்றனர். ஆய்வு கூட்டம் என்ற பெயரில், இரவு 11:00 மணி வரை நடத்துகின்றனர். அத்தகைய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, டாக்டர் பணியிடங்களை உருவாக்க வேண்டும்.

உலக சுகாதார நிறுவனம் வழிகாட்டுதல்படி, டாக்டர், நோயாளி, மருத்துவமனை பெயரை தெரிவிக்காமல், மகப்பேறு இறப்புகளை ஆய்வு செய்ய வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, உயர் அதிகாரிகளால் நடத்தப்படும் இணையவழி மற்றும் நேரடி ஆய்வு கூட்டங்களையும், துறை ரீதியான கூட்டங்களையும் புறக்கணித்துள்ளோம். கர்ப்பிணியர் விபரங்கள் பதிவேற்றம் உள்ளிட்ட பணிகளும் புறக்கணிக்கப்படும்.

வருமுன் காப்போம், குடும்பநல அறுவை சிகிச்சை உள்ளிட்ட முகாம்கள் நிறுத்தப்படும். பிரச்னைக்கு தீர்வு ஏற்படுத்தாவிட்டால், மகப்பேறு துறையில் அவசரம் இல்லாத சிகிச்சைகள் நிறுத்தப்படும் என, முதல்வருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. ஒருநாள் காய்ச்சல் பாதிப்பு என்று வந்தாலும், உடனடியாக உள்நோயாளியாக அனுமதிக்க வேண்டும் என, அதிகாரிகள் சொல்கின்றனர். இதை நோயாளிகள் விரும்புவதில்லை என்றாலும்கூட, அதிகாரிகள் தொந்தரவு காரணமாக, காய்ச்சல் பாதிப்புக்காக, இன்று சிகிச்சைக்கு வருவோர் அனைருக்கும் 'அட்மிஷன்' போட உள்ளோம்.

- டாக்டர் செந்தில், தலைவர், அரசு டாக்டர்கள் சங்கம்.

அரசு செயலர்

இன்று பேச்சு!அரசு டாக்டர்களின் போராட்டத்தை தொடர்ந்து, மக்கள் நல்வாழ்வு துறை செயலர் சுப்ரியா சாஹு, அனைத்து அரசு டாக்டர்களுடன் பேச்சு நடத்த அழைப்பு விடுத்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில், இன்று நடக்கும் பேச்சை தொடர்ந்து அடுத்த கூட்ட நடவடிக்கைகள் ஆலோசிக்கப்படும் என, டாக்டர்கள் தெரிவித்தனர்.








      Dinamalar
      Follow us