கருப்பு பட்டை அணிந்து வேலை அரசு ஊழியர்கள் சங்கம் அறிவிப்பு
கருப்பு பட்டை அணிந்து வேலை அரசு ஊழியர்கள் சங்கம் அறிவிப்பு
ADDED : அக் 03, 2025 01:56 AM

சென்னை: தமிழ்நாடு தலைமை செயலக சங்க தலைவர் வெங்கடேசன் அறிக்கை:
முதல்வர் ஸ்டாலின் உத்தரவுப்படி, ஓய்வூதியம் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட குழு, செப்டம்பர் 30ம் தேதிக்குள் அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டது.
ஆனால், ஓய்வூதிய திட்டம் ஆராயும் குழு அறிக்கையை வழங்காமல், கடந்த 30ம் தேதி இடைக்கால அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. இது முற்றிலும், முதல்வரின் அறிவிப்பை மீறிய செயல்.
காலநீட்டிப்பு என நேரடியாக அரசிடம் கேட்காமல், புறவாசல் வழியாக இடைக்கால அறிக்கை என்ற நாடகத்தை இக்குழு அரங்கேற்றி உள்ளது.
இது, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை வஞ்சிக்கும் செயல். இதை, தமிழ்நாடு தலைமை செயலக ஊழியர் சங்கம் கண்டிக்கிறது. குழுவிற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், வரும் 6ம் தேதி தலைமை செயலக பணியாளர்கள் கருப்பு பட்டை அணிந்து பணியாற்றுவர்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.