வாக்குறுதியை நிறைவேற்றக்கோரி அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்
வாக்குறுதியை நிறைவேற்றக்கோரி அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்
ADDED : டிச 28, 2024 03:48 AM
சென்னை: தி.மு.க., அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாகத்தில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, 'சத்துணவு, அங்கன்வாடி, கிராம உதவியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்களில் சிறப்பு காலமுறை ஊதியம் பெறும், மூன்றரை லட்சம் ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் உள்ள தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்.
'புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும்' என, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை மாநகராட்சி செங்கொடி சங்கத்தினரும், பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்தக் கோரி ரிப்பன் மாளிகையில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
'பல ஆண்டுகளாக பணியாற்றும், துாய்மை பணியாளர்கள், சாலை பணியாளர்கள், அம்மா உணவக பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
'அனைத்து துறைகளிலும் பணி செய்யும் தொழிலாளர்களுக்கு பொங்கல் பண்டிகைக்காக ஊக்கத்தொகை வழங்க வேண்டும்' உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.