ADDED : டிச 10, 2024 11:52 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:சர்வதேச திரைப்பட விழாவிற்காக, தமிழக அரசு சார்பில், 85 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.
சென்னையில் நாளை முதல், 19ம் தேதி வரை, சென்னை சர்வதேச திரைப்பட விழா நடைபெற உள்ளது. இவ்விழாவுக்காக, தமிழக அரசு சார்பில், ஒவ்வொரு ஆண்டும், 75 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டு வந்தது.
முதல்வர் உத்தரவுப்படி, கடந்த ஆண்டு, 85 லட்சம் ரூபாயாக நிதியுதவி உயர்த்தப்பட்டது.
நடப்பாண்டு, 22வது சர்வேதச திரைப்பட விழாவிற்கு, தமிழக அரசு சார்பில், 85 லட்சம் ரூபாய்க்கான காசோலையை, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் நேற்று முன்தினம் வழங்கினார்.
சென்னை சர்வதேச திரைப்பட விழா இயக்குநர் சண்முகம் காசோலையை பெற்றுக் கொண்டார்.