sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

போதை பொருள் கடத்தலை கண்காணிக்க அரசு தவறி விட்டது: அண்ணாமலை

/

போதை பொருள் கடத்தலை கண்காணிக்க அரசு தவறி விட்டது: அண்ணாமலை

போதை பொருள் கடத்தலை கண்காணிக்க அரசு தவறி விட்டது: அண்ணாமலை

போதை பொருள் கடத்தலை கண்காணிக்க அரசு தவறி விட்டது: அண்ணாமலை


ADDED : மார் 04, 2024 09:28 AM

Google News

ADDED : மார் 04, 2024 09:28 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை : ''போதை பொருள் கடத்துபவர்களை கண்காணிக்க, அரசு தவறி விட்டது, என, பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை கோவையில் தெரிவித்தார்.

கோவை விமான நிலையத்தில் அவர் அளித்த பேட்டி:


போதைப்பொருட்கள், இந்தியாவின் எல்லையில் இருந்து ஊடுருவுகின்றன. பெற்றோர்களும், ஆசிரியர்களும் கண்காணிக்க வேண்டும். போதைப்பொருள் கடத்திய ஜாபர் சாதிக், புதிய மனிதர் கிடையாது. ஏற்கனவே, 2013ல் கைது செய்யப்பட்டுள்ளார். இப்போது, சர்வதேச கிரிமினலாக மாறியுள்ளார். ஒருமுறை வழக்கு பதிவு செய்யப்பட்டு விட்டால், போலீசார் கண்காணிக்க வேண்டும். ஆனால் கண்காணிக்கவில்லை.

அவர், டி.ஜி.பி.,யிடம் விருது வாங்கியுள்ளார். சினிமா கம்பெனி நடத்துகிறார். தி.மு.க.,குடும்பத்திடம் நட்பாக உள்ளார்.

ஜாபர் சாதிக், எல்லா இடத்திலும் ஊடுருவியுள்ளார். முதல்வர், அமைச்சர்கள், உதயநிதி என எல்லோருடனும் புகைப்படம் எடுத்துள்ளார். யாருக்கு சந்தேகம் வராது?

பள்ளி, கல்வித்துறை, முதல்வர்கள், ரோட்டரி, லயன்ஸ் கிளப் தலைவர்கள் போதை பொருளை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

'ஸ்டார்ட் அப் சேலஞ்ச்'


தென்காசியில் போதை பொருளை ஒழிக்க, ஒரு 'ஸ்டார்ட் அப் சேலஞ்ச்' நடத்துகிறோம். மார்ச் 7, 8 தேதிகளில், மத்திய அமைச்சர் அஷ்வினி தலைமையில் நடக்கிறது.

ஸ்ரீதர் வேம்பு பங்கேற்கிறார். சமுதாய அக்கறையில், இந்த பிரச்னையை சரி செய்ய நினைக்கிறோம்.

உதயநிதியை, மோடியின் நகத்தில் உள்ள துாசுக்கு கூட, சமம் இல்லை என்று சொன்னதால், தி.மு.க.,வினருக்கு கோபம் வந்து விட்டது. அவர்கள் என்ன பேசினாலும், இங்கேதான் இருக்கப்போகிறோம்.

ஆட்சியிருக்கிறது, காவல் துறை இருக்கிறது என்பதற்காக, என்ன வேண்டு மென்றாலும் பேசலாம். காலம், காட்சிகள் மாறும்போது, அவர்களுக்கு என்ன நடக்கிறது என்பதை பார்த்துக் கொள்ளலாம்.

லோக்சபா தேர்தலை பொறுத்தவரை 39 தொகுதிகளிலும், பணி செய்து கொண்டிருக்கிறேன். எனது விருப்பு, வெறுப்பு எதுவும் இல்லை. பிரதமர் மோடி என்ன சொன்னாலும் கட்டுப்படுகிறேன்.

இவ்வாறு, அண்ணாமலை கூறினார்.

'சீமான் விண்ணப்பிக்கவில்லை'

தேர்தல் சின்னம் தொடர்பாக, சீமான் தெரிவித்த கருத்து குறித்து கேட்டதற்கு,. ''சீமானுக்கு சின்னம் வேண்டுமானால், தேர்தல் கமிஷனில் விண்ணப்பிக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக இருந்தால், தகுதியாக இருந்தால் கிடைக்கும். அங்கீகரிக்கப்பட்ட கட்சி இல்லை. புதுப்பிக்க, அவர் விண்ணப்பிக்கவில்லை. அண்ணாமலைக்கும் இதற்கும் தொடர்பு இல்லை. டில்லி ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கில், தேர்தல் கமிஷன் முடிவு சரியானது என தீர்ப்பளித்தது. விண்ணப்பிக்காமல் எப்படி சின்னம் கிடைக்கும்? வெள்ளத்தின்போது மறந்து விட்டதாக சீமானே தெரிவித்துள்ளார். அவர் முன்பு பிரதமர் மோடியை திட்டுவார்; இப்போது அண்ணாமலையை பேச ஆரம்பித்துள்ளார்,'' என்றார் அண்ணாமலை.



விருது கொடுத்துள்ளோம்'

அண்ணாமலை கூறுகையில், ''ராஜாஜி, காமராசர், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, விஜயகாந்த் உள்ளிட்டவர்களின் பண்புகளை பிரதமர் மோடி சுட்டிக் காட்டியுள்ளார். பிரணாப் முகர்ஜி, நரசிம்மராவ், சரண்சிங் ஆகியோருக்கு பாரத ரத்னா விருது கொடுத்துள்ளோம். காங்., தலைவர்களுக்கும், பா.ஜ., ஆட்சியில் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. அவர்களது மாண்பையும், பண்பையும் மக்கள் மன்றத்தில் வைக்கிறோம்,'' என்றார்.








      Dinamalar
      Follow us