அரசு மருத்துவமனை டாக்டருக்கு கத்திக்குத்து: ஸ்ரீவில்லிபுத்தூரில் அதிர்ச்சி
அரசு மருத்துவமனை டாக்டருக்கு கத்திக்குத்து: ஸ்ரீவில்லிபுத்தூரில் அதிர்ச்சி
UPDATED : ஜூலை 07, 2025 10:57 PM
ADDED : ஜூலை 07, 2025 10:52 PM

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் காது மூக்கு தொண்டை மருத்துவராக பணியாற்றும் டாக்டர் ரமேஷ்பாபுவை கத்தியால் குத்திய நபர் கைது செய்யப்பட்டார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் காது, மூக்கு, தொண்டை டாக்டராக பணியாற்றுபவர் ரமேஷ் பாபு 50, இவர் இன்று (ஜூலை 07) இரவு 9:00 மணிக்கு சின்ன கடை பஜாரில் உள்ள தனது சொந்த கிளினிக்கை மூடிவிட்டு வெளியில் வரும்போது மர்ம நபர் ஒருவர் அவரை கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடினார்.
அக்கம் பக்கத்தினர் மற்றும் போலீசார் ரமேஷ் பாபுவை மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். இதில் அவரது இடது பக்க வயிறு, தொடை, முதுகு உட்பட 6 இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது. டாக்டர் காளிராஜ் தலைமையிலான டாக்டர்கள் மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். ஸ்ரீவில்லிபுத்தூர் டி.எஸ்.பி. ராஜா தலைமையிலான போலீஸ் குழுவினர் விசாரித்தனர்.
கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடிய ராஜபாளையத்தை சேர்ந்த பாண்டி கணேசனை என்பவரை பிடித்து போலீசார் விசாரிக்கின்றனர்