ADDED : மே 08, 2026 01:22 AM
சென்னை: தி.மு.க., ஆட்சியில், கல்வி உட்பட பல்வேறு துறைகளில், தி.மு.க., அனுதாபிகளுக்கு, பல்வேறு பதவிகள் வழங்கப்பட்டன. தேர்தலில் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, அவர்கள் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.
தமிழகத்தில், கடந்த 2021ல், தி.மு.க., ஆட்சி அமைந்ததும், பல்வேறு கல்வி அமைப்புகளில், மிக முக்கிய பொறுப்புகளில், தி.மு.க., அனுதாபிகளுக்கு பதவிகள் வழங்கப்பட்டன. தமிழ் வளர்ச்சி துறையின் கீழ் இயங்கும், உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவராக, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஆர்.பாலகிருஷ்ணன் நியமிக்கப்பட்டார்.
தமிழ்நாடு பாடநுால் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவராக, லியோனிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
பள்ளிக் கல்வித்துறை கீழ் இயங்கும், நுாலக ஆணைக்குழு தலைவராக கவிஞர் மனுஷ்யபுத்திரன், சமூகநீதி கண்காணிப்புக்குழு தலைவராக சுப.வீரபாண்டியன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும், தங்களின் பதவிகளில் இருந்து, விலகுவதாக அறிவித்துள்ளனர்.
