தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ 114 கட்டுமான திட்டங்களுக்கு அரசு தவறுதலாக அனுமதி

114 கட்டுமான திட்டங்களுக்கு அரசு தவறுதலாக அனுமதி

114 கட்டுமான திட்டங்களுக்கு அரசு தவறுதலாக அனுமதி


ADDED : டிச 11, 2024 12:08 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 11, 2024 12:08 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகள், 2011ல் அறிவிக்கப்பட்டன. 11 ஆண்டுகளாகியும் உள்ளூர் மக்களின் பங்கேற்புடன், மாவட்ட கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் அமைக்கப்படவில்லை.

இதில், விதிமுறைகளுக்கு மாறாக, கட்டுமான திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கும் பொறுப்பை, தமிழக கடலோர மண்டல மேலாண்மை குழுமம், வேறு குழுமத்துக்கு வழங்கி உள்ளது.

கடந்த, 2015 - 22 காலகட்டத்தில், 175 விண்ணப்பங்கள் பெறப்பட்டதில், 114 திட்டங்களுக்கு, தகுந்த ஆணையத்தின் பரிந்துரையின்றி ஒப்புதல் அளிக்கப்பட்டது தெரியவந்துள்ளது.

இதில், தமிழக கடலோர ஒழுங்குமுறை மண்டல குழுமம், உரிய ஆணைய பரிந்துரை பெறாமல், ஆவணங்களை ஆய்வு செய்யாமல், தடை செய்யப்பட்ட இடங்களில், 17 கட்டுமான திட்டங்களுக்கு தவறுதலாக ஒப்புதல் அளித்துள்ளது.

மீன்வளம், சுற்றுலா, பொதுப்பணி, குடிசை மாற்று வாரியம், சாலை மேம்பாட்டு நிறுவனம், சென்னை மாநகராட்சி போன்ற அரசு துறைகள், ஐந்துக்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்களின் கட்டுமான திட்டங்களுக்கு தவறுதலாக ஒப்புதல் அளித்துள்ளன.

கடலோர ஒழுங்குமுறை மண்டல வரைபடங்கள் தயாரிப்பதிலும், அபரிமிதமான தாமதம் ஏற்பட்டுள்ளது.

கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகளின் கீழ் ஒப்புதல் வழங்குவதை கண்காணிக்க, ஒரு அமைப்பை ஏற்படுத்த வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us