தமிழக அரசின் 2 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்தார் கவர்னர்
தமிழக அரசின் 2 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்தார் கவர்னர்
ADDED : ஏப் 22, 2025 05:27 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: தமிழக அரசின் 2 மசோதாக்களுக்கு கவர்னர் ரவி ஒப்புதல் அளித்து உள்ளார். இதனையடுத்து அவை சட்டமாகி உள்ளன.
மாநில சட்டசபைகளில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் கவர்னர் காலதாமதம் செய்வதாக தொடரப்பட்ட வழக்கில், மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க கவர்னர்களுக்கும், ஜனாதிபதிக்கும் உச்சநீதிமன்றம் காலக்கெடு விதித்து சமீபத்தில் உத்தரவிட்டு இருந்தது.
இந்நிலையில், தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட 2 மசோதாக்களுக்கு கவர்னர் ரவி ஒப்புதல் அளித்து உள்ளார். தனியார் பல்கலைக்கழகங்கள் திருத்த சட்ட மசோதா, தமிழ்நாடு பொது கட்டட உரிமை திருத்த சட்ட மசோதாவுக்கும் கவர்னர் ஒப்புதல் அளித்து உள்ளார். இதன் மூலம் அவை சட்டங்களாகி உள்ளன.