தமிழக ஆளுநர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி காட்டிய 52 பேர் கைது
தமிழக ஆளுநர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி காட்டிய 52 பேர் கைது
UPDATED : ஜன 17, 2024 08:40 PM
ADDED : ஜன 17, 2024 08:09 PM

கவிச்சக்கரவர்த்தி கம்பர் பிறந்த ஊரான மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா தேரழுந்தூர் கம்பர் மணிமண்டபத்தில் தஞ்சாவூர் மண்டல ஹிந்து ஆலய பாதுகாப்பு இயக்கம் சார்பில் 'அயோத்தி ராமனும், தமிழ் கம்பனும்' என்ற தலைப்பில் ஆன கருத்தரங்கில் இன்று கலந்து கொள்ள வந்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் விடுபடுவதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், திராவிடர் விடுதலைக் கழகம், தமிழ் மண் தன்னுரிமை இயக்கத்தினர் சேத்திரபாலபுரம் மெயின் ரோட்டில் திரண்டனர்.
அவர்களை தடுப்புகள் அமைத்து 100 மீட்டருக்கு முன்பாக போலீசார் தடுத்து நிறுத்தினர். சேத்திரபாலபுரம் பகுதியில் 12 மணி அளவில் ஆளுநர் ஆர் என். ரவி காரில் சென்ற நிலையில் போராட்டக்காரர்கள் 100 மீட்டருக்கு அப்பாலில் இருந்து கருப்புக்கொடி காண்பித்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தி கோஷமிட்டனர். தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட 52 பேரை போலீசார் கைது செய்தனர். அப்போது மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சி ஒன்றிய செயலாளர் விஜயகாந்த் போலீசாரிடம் டிமிக்கி கொடுத்து ஆளுநர் காரை நோக்கி ஓடியவரை போலீசார் மடக்கிபிடித்து கைது செய்தனர். இதனால பரபரப்பு ஏற்பட்டது

