ADDED : நவ 07, 2026 06:21 PM
சென்னை: தீபாவளி திருநாளை முன்னிட்டு, கவர்னர் ராஜேந்திர அர்லேக்கர், முதல்வர் விஜய் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
அதன் விபரம்:
* கவர்னர் ராஜேந்திர அர்லேகர்: தீபாவளி திருநாளை முன்னிட்டு, தமிழக மக்கள் அனைவருக்கும், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உலகெங்கிலும் வாழும் இந்தியர்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த வாழ்த்துகள்.
இந்த நன்னாளில், ஒற்றுமை, பரஸ்பர மரியாதை மற்றும் மனிதநேய தொண்டு ஆகிய உயரிய லட்சியங்களை போற்றி பாதுகாத்து, வளர்ச்சியடைந்த பாரதம், வளர்ச்சியடைந்த தமிழ்நாடு என்ற இலக்கை எட்ட, நம் பங்களிப்பை முழுமையாக வழங்க உறுதியேற்போம்.
* முதல்வர் விஜய்: மக்கள் மனங்களில் புதிய நம்பிக்கையையும், புத்துணர்வையும், மகிழ்ச்சியையும் மலரச் செய்யும் தீபாவளித் திருநாளில், அனைவருக்கும் என் மனமார்ந்த நல்வாழ்த்துகள். இருள் நீங்கி ஒளி பிறக்கும் நாளாகவும், தீமைகள் அழிந்து, நன்மைகள் பெருகும் வெற்றித் திருநாளாகவும் கொண்டாடப்படும் தீபாவளிப் பண்டிகையை பாதுகாப்போடும், மிகுந்த உற்சாகத்தோடும் கொண்டாடி, அளவற்ற அன்பையும் மகிழ்ச்சியையும் அனைவருடனும் பகிர்ந்து கொள்வோம்.
இல்லங்கள்தோறும் ஆனந்தம் பெருகி, அனைவரின் வாழ்விலும் புது நம்பிக்கை பிறந்து, உற்சாகம் பொங்கிப் பெருகும் நாளாக இந்த திருநாள் அமையட்டும்.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
