புதிய தமிழக தகவல் ஆணையர்களை நியமித்து கவர்னர் உத்தரவு
புதிய தமிழக தகவல் ஆணையர்களை நியமித்து கவர்னர் உத்தரவு
ADDED : ஜூன் 18, 2025 06:11 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: தமிழக தகவல் ஆணையர்களாக இளம்பரிதி மற்றும் நடேசன் ஆகியோரை நியமித்து கவர்னர் ரவி உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 2005ம் ஆண்டு தமிழக அரசின் சார்பில் மாநில தகவல் ஆணையம் உருவாக்கப்பட்டது. முதலில் ஒரு தலைமை தகவல் ஆணையர் மற்றும் 2 தகவல் ஆணையர்களுடன் இந்த ஆணையம் தொடங்கப்பட்டது. அதன்பிறகு, தகவல் ஆணையர்களின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டது.
மாநில தகவல் ஆணையர்களாக இளம்பரிதி மற்றும் நடேசன் ஆகியோரை தேர்வு செய்து கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த நிலையில், புதிய மாநில தகவல் ஆணையர்களின் நியமனத்திற்கு கவர்னர் ரவி ஒப்புதல் அளித்து உத்தரவிட்டுள்ளார். புதிதாக பொறுப்பேற்கும் மாநில தகவல் ஆணையர்களின் பதவிக்காலம் 3 ஆண்டுகளாகும்.

