sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 26, 2026 ,பங்குனி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சட்டசபையில் கவர்னர் உரை தேவையில்லை; அரசியல் சட்டத்தை திருத்த தி.மு.க., முயற்சிக்கும்: முதல்வர் ஸ்டாலின்

/

சட்டசபையில் கவர்னர் உரை தேவையில்லை; அரசியல் சட்டத்தை திருத்த தி.மு.க., முயற்சிக்கும்: முதல்வர் ஸ்டாலின்

சட்டசபையில் கவர்னர் உரை தேவையில்லை; அரசியல் சட்டத்தை திருத்த தி.மு.க., முயற்சிக்கும்: முதல்வர் ஸ்டாலின்

சட்டசபையில் கவர்னர் உரை தேவையில்லை; அரசியல் சட்டத்தை திருத்த தி.மு.க., முயற்சிக்கும்: முதல்வர் ஸ்டாலின்

6


ADDED : ஜன 21, 2026 05:22 AM

Google News

ADDED : ஜன 21, 2026 05:22 AM

6


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: ''கவர்னர் உரை என்ற நடைமுறையை விலக்கும் வகையில், அரசியலமைப்பு சட்டத்தை திருத்துவதற்கான முயற்சிகளை, பார்லிமென்டில் தி.மு.க., முன்னெடுக்கும்,'' என, முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

சட்டசபையில், கவர்னர் உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் வாசிப்பது தொடர்பான தீர்மானத்தை, முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்தார். தீர்மானத்தை ஆதரித்தவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: சட்டசபையில் கவர்னர் மீண்டும் ஒருமுறை, சட்ட விதிகளையும், மரபுகளையும் மீறி, சபையில் இருந்து வெளியே சென்றுள்ளார்.

கவர்னரின் செயல், அவர் வகிக்கக்கூடிய பதவிக்கு அழகல்ல. அரசியலமைப்பு சட்டம், 176ன்படி, கவர்னர் உரை என்பது, மாநில அரசால் தயாரிக்கப்பட்டு, கவர்னரால் முழுமையாக படிக்க வேண்டிய ஒன்று. இதில், கவர்னர் தன் சொந்த கருத்துகளை தெரிவிப்பதற்கோ, மாநில அரசால் தயாரித்து வழங்கப்பட்ட உரையில் நீக்கம் செய்வதற்கோ, சட்டத்தில் இடமில்லை.கவர்னர் உரை தெடர்பாக விளக்கம் கேட்பதற்கும், சட்டத்தில் வழிவகை செய்யப்படவில்லை.

இருப்பினும், கவர்னர் ரவி சில விளக்கங்களை குறிப்பிட்டு, அரசுக்கு கடிதம் எழுதியதற்கு, பதிலும் அளிக்கப்பட்டது. ஆனாலும், அவர் வேண்டுமென்றே சட்டத்தை மீறிய செயலை செய்துள்ளார்.

நுாற்றாண்டு கால மரபையும், நீண்ட பாரம்பரியத்தையும் கொண்ட மக்கள் சபையையும், அதன் மாட்சிமையையும் அவமதிக்கும் செயல் இது.

கவர்னர் பதவி வேண்டாம் என, அண்ணாதுரை கூறியபோதும், கருணாநிதி அதை வழிமொழிந்தபோதும், அந்த பதவி இருக்கும் வரை, அதற்குரிய மரியாதை கொடுக்க, அவர்கள் தவறியதில்லை.

அவர்களது வழியை பின்பற்றி, நானும் இம்மியளவும் விலகியதில்லை; இந்த அரசும் தவறியதில்லை. கவர்னர் என்பவர், மக்கள் நலனில் அக்கறை கொண்டவராக, மக்கள் மேம்பாட்டில் ஆர்வம் கொண்டவராக, உண்மையை பேசுபவராக இருக்க வேண்டும். மக்கள் பேராதரவுடன் ஆட்சி அமைத்துள்ள அரசு எடுக்கும் முடிவுகளுக்கு, ஒத்துழைப்பவராக இருக்க வேண்டும். ஆனால், கவர்னர் ரவி அதற்கு மாறாக செயல்படுகிறார்.

மாநில நிர்வாகத்தை முடக்க, பொது மேடைகளில் அரசியல் பேசி அவதுாறு பரப்பி வருகிறார். அது அவரது சொந்த விருப்பம் என்று கருதலாம். எனினும் அத்தகைய முயற்சியை சபையில் செய்ய அவர் முனைவது ஏற்புடையதல்ல. இந்த சபையின் மாண்பை பாதுகாக்க வேண்டிய முதல் பொறுப்பு எனக்கு உள்ளது.

ஆண்டுதோறும், அரசு சார்பில் உரை தயாரித்து அனுப்புவதும், அதை முறையாக வாசிக்காமல், கவர்னர் முரண்டு பிடிப்பதும் தொடர்வது நல்லதல்ல. கவர்னர்கள் மாநில அரசுகளுக்கு இடைஞ்சலாக இருந்து, இப்படி செயல்படுவது இங்கு மட்டுமல்ல; பல்வேறு மாநிலங்களிலும் நடந்து வருகிறது.

ஒருநாள் செய்தியாக, இதை கடந்து விட முடியாது. ஆண்டின் தொடக்கத்தில், அரசின் கொள்கை அறிக்கையை, கவர்னர் முறையாக வாசிப்பது நடைமுறை. இந்த நடைமுறையை ஒருவர் தொடர்ந்து மீறும்போது, அதுபோன்ற விதிகளை எதற்காக வைத்திருக்க வேண்டும் என்ற கேள்வி, சாதாரணமாகவே அனைவரின் மனதிலும் எழும்.

எனவே ஆண்டின் துவக்கத்தில் கவர்னர் உரை என்ற நடைமுறையை விலக்கும் வகையில் அரசியலமைப்பு சட்டத்தை திருத்துவதற்கான முயற்சிகளை இந்தியா முழுதும் உள்ள ஒருமித்த கருத்துள்ள அரசியல் கட்சிகள் துணையோடு, பார்லிமெண்டில் தி.மு.க., முன்னெடுக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

கவர்னர் வாசிக்காவிட்டாலும்

சபைக்குறிப்பில் உரை இடம்பெறும்

முதல்வர் கொண்டு வந்த தீர்மானம்: ஏற்கனவே உள்ள நடைமுறைகளை பின்பற்றி, தமிழக அரசால் தயாரித்து அனுப்பப்பட்ட உரையை படிக்காமல், கவர்னர் சென்றுள்ளதை, இந்த சபை ஏற்கவில்லை. கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்ட உரையின் ஆங்கில மொழியாக்கம், கவர்னரால் படிக்கப்பட்டதாக, இந்த சபை கருதுகிறது. அவ்வாறே சபைக் குறிப்பில் அது இடம்பெறும். மரபுவழி நிகழ்வுகள், சபாநாயகரால் படிக்கப்பட உள்ள கவர்னர் உரையின் தமிழாக்கம் மற்றும் நான் முன்மொழியும் தீர்மானம், அதன் முடிவு மட்டுமே சபைக்குறிப்பில் இடம்பெறலாம் என்ற தீர்மானத்தை முன்மொழிகிறேன். இந்த தீர்மானத்தை அனைவரும் ஒருமனதாக நிறைவேற்றி தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us