'பா.ஜ., ஆளாத மாநிலங்களில் கவர்னர்கள் காழ்ப்புணர்ச்சி'
'பா.ஜ., ஆளாத மாநிலங்களில் கவர்னர்கள் காழ்ப்புணர்ச்சி'
ADDED : பிப் 15, 2024 01:18 AM
புதுக்கோட்டை:''தமிழ்த்தாய் வாழ்த்து, அதன்பின் தேசிய கீதம் என்பது மரபு. பா.ஜ., ஆளாத மாநிலங்களில் காழ்ப்புணர்ச்சி காரணமாக கவர்னர்களின் செயல்பாடு உள்ளது,'' என, புதுக்கோட்டையில் தி.மு.க., எம்.பி., அப்துல்லா தெரிவித்தார்.
புதுக்கோட்டையில் அவர் அளித்த பேட்டி:
தொழில்நுட்பத்தில் இந்தியா முன்னேற்றம் அடைந்துள்ளதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.
புதுடில்லி நோக்கிச் சென்ற விவசாயிகள் மீது 'ட்ரோன்' மூலம் கண்ணீர் புகை கொண்டு வீசியது தான் தொழில்நுட்பவளர்ச்சியா?
விவசாயிகள் போராட்டம் நியாயமானது. பத்தாண்டு காலமாக அவர்களது கோரிக்கை நிறைவேற்றப்படாததால், அவர்கள் போராட்டம் நடத்துகின்றனர்.
வருகிற லோக்சபாதேர்தலில் பா.ஜ., 50 இடங்களாவது வெற்றி அடையுமா என பார்க்க வேண்டும்.
தமிழக சட்டசபையில் நடைமுறைகள் என்ன என்பது மக்களுக்கு தெரியும். தமிழ்த்தாய் வாழ்த்து, அதன்பின் தேசிய கீதம் என்பது மரபு. பா.ஜ., ஆளாத மாநிலங்களில் காழ்ப்புணர்ச்சி காரணமாக கவர்னர்களின் செயல்பாடு உள்ளது.
இவ்வாறு அவர்கூறினார்.

