ரிப்பேர் பார்க்க ஆளில்லை அரசு 'கேபிள் டிவி' திவால்?
ரிப்பேர் பார்க்க ஆளில்லை அரசு 'கேபிள் டிவி' திவால்?
UPDATED : நவ 07, 2024 04:40 AM
ADDED : நவ 07, 2024 01:43 AM

சென்னை:அரசு 'கேபிள் டிவி' நிர்வாகம், ஆப்பரேட்டர்களின் புகார்களை கண்டுகொள்ளாததால், பலர் தனியாருக்கு மாறி வருகின்றனர்.
இது குறித்து, அரசு 'கேபிள் டிவி' ஆப்பரேட்டர்கள் சிலர் கூறியதாவது:
தமிழகத்தில் தற்போது உள்ள 'செட் டாப் பாக்ஸ்'கள், 2016ல் வாங்கப்பட்டவை. இவற்றின் ஆயுட்காலம் மூன்று ஆண்டுகள் மட்டுமே. எனினும் சில பாக்ஸ்கள் உபயோகத்தில் உள்ளன.
இவற்றை, எச்.டி., - செட் டாப் பாக்ஸ்களாக தரம் உயர்த்த, அரசுக்கு பலமுறை கோரிக்கை வைத்துள்ளோம். கடந்த ஜூன் மாதம், 'தமிழகம் முழுதும் எச்.டி., செட் டாப் பாக்ஸ்கள் வழங்கப்படும்' என, சட்டசபையில் அறிவிக்கப்பட்டது; இதுவரை வழங்கப்படவில்லை.
செட் டாப் பாக்ஸ் பழுதானால், அதை சரிசெய்ய, மாவட்டங்களில் சர்வீஸ் மையங்கள் இல்லை. சிக்னல் பிரச்னை புகார் வந்தால், அதை சரி செய்ய ஆட்கள் கிடையாது.
இதனால் ஆப்பரேட்டர்கள், பழுதான அரசு செட் டாப் பாக்ஸை, அரசு கேபிள் நிறுவனத்திடம் ஒப்படைத்து விட்டு, தனியாருக்கு மாறி வருகின்றனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.