ADDED : மார் 04, 2024 04:42 AM

சென்னை : பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட, 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு பணியாளர் சங்கங்களின் கூட்டமைப்பினர், நேற்று உண்ணாவிரத போராட்டம்நடத்தினர்.
தமிழ்நாடு அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி பணியாளர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், சென்னையில் காயிதே மில்லத் மணிமண்டபம் அருகே, நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் அமிர்தகுமார், ரங்கராஜன் ஆகியோர் தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில், ஆயிரக்கணக்கான அரசு பணியாளர்கள் பங்கேற்று உண்ணாவிரதம் இருந்தனர்.
தி.மு.க., தன் தேர்தல் அறிக்கையில் கூறியபடி, பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு, அனைவருக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை தாமதமின்றி அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட, 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்த போராட்டம் நடந்தது.

