ஸ்ரீ சாய்ராம் இன்ஜி., கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
ஸ்ரீ சாய்ராம் இன்ஜி., கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
ADDED : ஏப் 09, 2025 02:35 AM

சென்னை:சென்னை ஸ்ரீ சாய்ராம் இன்ஜினியரிங் கல்லுாரியில் நடந்த, 25வது பட்டமளிப்பு விழாவில், 'சந்திரயான் - 3' திட்ட இயக்குநர் வீரமுத்துவேல், மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி வாழ்த்தினார்.
சென்னை மேற்கு தாம்பரத்தில் உள்ள ஸ்ரீசாய்ராம் இன்ஜினியரிங் கல்லுாரியின், 25வது பட்டமளிப்பு விழா, சமீபத்தில் நடந்தது.
இதில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின், 'சந்திரயான் - 3' திட்ட இயக்குநர் வீரமுத்துவேல், 1,131 மாணவர்களுக்கு பட்டங்களையும், துறைவாரியாக முதலிடம் பெற்ற, 39 மாணவர்களுக்கு, 45 லட்சம் ரூபாய்க்கான பரிசுகளையும் வழங்கினார்.
மேலும், 'எதிர்கால இந்தியாவின் வளர்ச்சியில் மாணவர்களின் பங்கு' என்ற தலைப்பில் பேசினார்.
விழாவிற்கு தலைமை வகித்த சாய்ராம் கல்வி குழும தலைமை செயல் அலுவலர் சாய்பிரகாஷ் லியோமுத்து, 'கடந்த, 25 ஆண்டுகளில், ஆயிரக்கணக்கான பட்டதாரிகளையும், சாதனையாளர்களையும் உருவாக்கிய கல்லுாரியான இது, அருகில் உள்ள கிராமங்களை தத்தெடுத்து, அப்பகுதி இளைஞர்களின் கல்வி வளர்ச்சிக்கும், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு ஆண்டுக்கு, 2 கோடி ரூபாய் உதவித்தொகையும் வழங்குகிறது' என்றார்.
விழாவில், 'கிஸ்ப்ளோ' நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அலுவலர் சுரேஷ் சம்பந்தம், சாய்ராம் கல்விக்குழும தலைவர் கலைச்செல்வி லியோமுத்து, கல்லுாரி முதல்வர் ராஜா, சாய்ராம் கல்விக்குழும இயக்குநர் ரேவதி சாய்பிரகாஷ், தேர்வு கட்டுப்பாட்டாளர் பிரேமானந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.