உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : நவ 23, 2024 02:48 AM
அ நிறம் | அளவு
சென்னை:சென்னையை தவிர அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ஊராட்சிகளில் ஜனவரி 26 குடியரசு தினம்; மார்ச் 22 உலக தண்ணீர் தினம்; மே 1 தொழிலாளர் தினம்; ஆக.15 சுதந்திர தினம்; அக்.2 காந்தி பிறந்த தினம்; நவம்பர் 1 உள்ளாட்சிகள் தினம் என, ஆறு நாட்கள் கிராம சபை கூட்டம் நடத்தப்படுகிறது.
தீபாவளிக்கு மறுநாள் நவ.1 அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டதால் கிராம சபை நடக்கவில்லை. பதில் நவ.23 கிராம சபை கூட்டம் நடக்கும் என அறிவிக்கப்பட்டது. இன்று காலை 11:00 மணிக்கு ஊராட்சிகளில் கூட்டம் நடக்க உள்ளது.
