ஜல்லிக்கட்டு; அமைதி பேச்சுவார்த்தை நடத்த ஐகோர்ட் உத்தரவு
ஜல்லிக்கட்டு; அமைதி பேச்சுவார்த்தை நடத்த ஐகோர்ட் உத்தரவு
ADDED : ஜன 09, 2024 03:50 PM

மதுரை: மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டை முன்னிட்டு, அனைத்து சமூகத்தினரையும் அழைத்து கலெக்டர் அமைதி பேச்சு நடத்த வேண்டும் என்று ஐகோர்ட் மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு ஆகிய ஊர்களில் , அனைத்து சமூகத்தை சேர்த்து கமிட்டி அமைத்து ஜல்லிக்கட்டு விழா நடத்தப்படுகிறது. இதேபோல, அவனியாபுரத்திலும் அமைக்க வேண்டும் என ஐகோர்ட் மதுரை கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று(ஜன.,09) விசாரணைக்கு வந்தது.
அப்போது ஐகோர்ட் மதுரைக் கிளை பிறப்பித்துள்ள உத்தரவு
அவனியாபுரம் ஜல்லிக்கட்டுக்காக அனைத்து சமூகத்தை சேர்ந்தவர்களை அழைத்து அமைதி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.
மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நாளை நடைபெறும் அமைதி பேச்சுவார்த்தையை முழுமையாக வீடியோ பதிவு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
அமைதி பேச்சுவார்த்தைக்கு அனைத்து தரப்பினரையும் முறையாக அழைக்க வேண்டும். இவ்வாறு ஐகோர்ட் மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.