sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ரூ.1,080 கோடியில் 60 ஆயிரம் பசுமை வீடுகள்

/

ரூ.1,080 கோடியில் 60 ஆயிரம் பசுமை வீடுகள்

ரூ.1,080 கோடியில் 60 ஆயிரம் பசுமை வீடுகள்

ரூ.1,080 கோடியில் 60 ஆயிரம் பசுமை வீடுகள்


ADDED : ஆக 05, 2011 02:41 AM

Google News

ADDED : ஆக 05, 2011 02:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : சூரிய ஒளி மூலம் மின்சாரம் பெறும் வகையில், 1,080 கோடியில், 60 ஆயிரம் பசுமை வீடுகள் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளதாவது: வீடற்ற ஏழை மக்களுக்கு, 1 லட்சத்து 80 ஆயிரம் ரூபாயில், 300 சதுர அடியில், 60 ஆயிரம் பசுமை வீடுகள் கட்டப்படும்.

இதற்கு நடப்பாண்டில் 1,080 கோடி ஒதுக்கப்படும். இந்திரா நினைவு குடியிருப்புத் திட்டத்தின் கீழ், தற்போது கட்டப்படும் வீட்டுக்கு வழங்கப்படும் உதவித் தொகையான, 75 ஆயிரத்திலிருந்து ஒரு லட்சமாக உயர்த்தப்படும். இதில், மத்திய அரசின் மானியப் பங்கு, ஒவ்வொரு வீட்டுக்கும் 33 ஆயிரத்து 750 ரூபாய் ஆகும். மாநில அரசின் மானியப் பங்கு, தற்போதுள்ள 41 ஆயிரத்து 250 ரூபாய்க்கு பதிலாக, 66 ஆயிரத்து 250 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். இந்தத் திட்டத்தின் கீழ், நடப்பாண்டில் ஒரு லட்சத்து 553 வீடுகள் கட்டப்படும்.



கிராமப் புறங்களில், அடிப்படை வசதிகளை மேம்படுத்த, நடப்பாண்டு முதல் ஒருங்கிணைந்த கிராமக் கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம் தொடங்கப்படும். தற்போதுள்ள பல்வேறு திட்டங்களையும் ஒருங்கிணைத்து, கிராமக் குடியிருப்புகளை அடிப்படையாகக் கொண்டு, இத் திட்டம் செயல்படுத்தப்படும். இந்த ஒருங்கிணைந்த கிராம கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு ஆண்டும், 680 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, 5 ஆண்டுகளில் அனைத்து கிராமக் குடியிருப்புகளும் படிப்படியாகப் பயனடையும். இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.



* பொது விற்பனை வரிச் சட்டம் மற்றும் பிற சட்டங்களின் கீழ், வசூலிக்கப்படவுள்ள வரிகள், அபராதத் தொகையை வசூலிக்க, தமிழகத்தில் மீண்டும்,'சமாதான்' திட்டம் அக். 1 முதல் செயல்படும். இத்திட்டம், 2012 மார்ச் 31 வரை அமலில் இருக்கும்.

* வணிகவரித் துறையில், மின்னணு ஆளுகை முறைகளைப் புகுத்தத் தேவையான மென்பொருள், வன்பொருள் ஆகியவற்றின் தேவைகளை முழுமையாக அரசு நிறைவேற்றும்.

* பொங்கல் பண்டிகையையொட்டி, இலவச வேட்டி,சேலை திட்டத்திற்கு, 269 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒரு கோடியே 59லட்சத்து 4 ஆயிரம் சேலைகளும், ஒரு கோடியே 58 லட்சத்து 19 ஆயிரம் வேட்டிகளும் பயனாளிகளுக்கு வழங்கப்படும்.

* ஒருங்கிணைந்த சாலை கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், 257 கோடி ரூபாய் செலவில், தூத்துக்குடியிலிருந்து திருச்செந்தூர் வழியாக, கன்னியாகுமரி வரை செல்லும் கிழக்கு கடற்கரைச் சாலையின், மீதமுள்ள 113 கி.மீ., நீள சாலை, விரிவுபடுத்தப்பட்டு மேம்படுத்தப்படும்.

* சிறுசேரியிலிருந்து, மாமல்லபுரத்தை இணைக்கும், 25 கி.மீ., நீளமுள்ள ராஜிவ்காந்தி சாலையின், இரண்டாம் கட்டப்பணிகளுக்கு, நிலம் கையகப்படுத்தும் பணி நடந்து வருகிறது. பணிகள் முடிவடைந்த உடன், 550 கோடி ரூபாய் செலவில், சாலை அமைக்கும் பணி மேற்கொள்ளப்படும்.

* மதுரை, ராமேஸ்வரம், கன்னியாகுமரி, தஞ்சாவூர் ஆகிய இடங்களில், 51 கோடி ரூபாய் செலவில், சுற்றுலா கட்டமைப்புகளை மேம்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. சுற்றுலா வளர்ச்சித் திட்டத்தின் கீழ், நடப்பாண்டில் 53 கோடி ரூபாயில், ஒன்பது சுற்றுலா திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

* ஆசிய வளர்ச்சி வங்கி உதவியுடன், 450 கோடி ரூபாய் மதிப்பீட்டில், ஒருங்கிணைந்த சுற்றுலா கட்டமைப்புத் திட்டத்தை செயல்படுத்த, மத்திய அரசு, நான்கு மாநிலங்களைத் தேர்ந்தெடுத்துள்ளது. அதில், தமிழகம் ஒன்றாகும்.

* திருக்கடையூர், நவக்கிரக கோவில்களை உள்ளடக்கிய சுற்றுலா, தெற்கில் உள்ள ராமேஸ்வரம், மதுரை, கன்னியாகுமரியை உள்ளடக்கிய தெற்கு மண்டலச் சுற்றுலா போன்ற ஆன்மீகச் சுற்றுலாக்கள் முதன்மைப்படுத்தப்படும். அதுபோலவே வனம், மலைப் பகுதிகள், கடற்கரை ஆகியவற்றை உள்ளடக்கிய, சுற்றுச்சூழல் சுற்றுலாவை ஊக்குவிக்க, அரசு மற்றும் தனியார் கூட்டு முயற்சியின் மூலம், நடவடிக்கைகள் எடுக்கப்படும்.








      Dinamalar
      Follow us