ADDED : ஏப் 07, 2025 01:07 AM
சென்னை: மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர் முகாம்களை நாளை நடத்த, ஊரக வளர்ச்சி துறை உத்தரவிட்டுள்ளது.
தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், மாற்றுத்திறனாளிகளுக்கும் பணிகள் வழங்கப்பட்டுள்ளன. இப்பணியில் ஈடுபடுத்தப்படும் மாற்றுத்திறனாளிகளுக்கு, இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை, இரண்டாவது செவ்வாய் கிழமை குறைதீர் முகாம்கள் நடத்த வேண்டும்.
மாவட்ட அளவில் நடக்கும் குறைதீர் முகாமில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர், இணை இயக்குநர்கள் பங்கேற்க வேண்டும். இதேபோல, மாநிலம் முழுதும் வட்டார வளர்ச்சி அலுவலகங்களில், மாதந்தோறும் இரண்டாவது செவ்வாய் கிழமை குறைதீர் முகாம் நடத்த வேண்டும்.
இதில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க வேண்டும். அதன்படி நாளை, அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும், குறைதீர் முகாம் நடத்தும்படி ஊரக வளர்ச்சித் துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். இதில், மாற்றுத்திறனாளிகள், அவர்களின் சங்க நிர்வாகிகள் பங்கேற்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.