தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/தமிழகம்/'குரூப் - 4' தேர்வு விண்ணப்ப பதிவு நாளை நிறைவு

'குரூப் - 4' தேர்வு விண்ணப்ப பதிவு நாளை நிறைவு

'குரூப் - 4' தேர்வு விண்ணப்ப பதிவு நாளை நிறைவு


ADDED : பிப் 27, 2024 12:11 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 27, 2024 12:11 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: அரசு துறைகளில், 6,244 காலியிடங்களை நிரப்புவதற்கான, 'குரூப் - 4' தேர்வுக்கு, நாளையுடன் விண்ணப்ப பதிவு முடிகிறது. இந்நிலையில், அவகாசத்தை நீட்டிக்குமாறு, பட்டதாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழக அரசு துறைகளில், வி.ஏ.ஓ., இளநிலை உதவியாளர், டைப்பிஸ்ட் உள்ளிட்ட, 16 வகை, 'குரூப் - 4' பதவிகளில், 6,244 காலியிடங்களை நிரப்ப, வரும் ஜூன் 9ல், தேர்வு நடக்க உள்ளது.

இதற்கான, 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு, ஜனவரி, 30ல் துவங்கியது. பதிவுக்கான அவகாசம், நாளையுடன் நிறைவு பெறுகிறது. இந்நிலையில், விண்ணப்ப பதிவுக்கு, இன்னும் கூடுதல் நாட்கள் அவகாசம் வழங்குமாறு, பட்டதாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேர்வு குறித்த கூடுதல் விபரங்களை, தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி.,யின் www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us