ADDED : நவ 18, 2025 06:55 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தமிழகத்தில் அதிக தொலைவுக்கு நடைபயணம் சென்றவன் நான் தான். இதுவரை 7,000 கி.மீ., நடந்துள்ளேன். தற்போது மதுவை விட கஞ்சா, போதைப் பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது. பள்ளி மாணவர்கள் போதைப் பொருளை தயக்கமோ, அச்சமோ இன்றி பயன்படுத்துகின்றனர். போதைப் பொருள் பயன்படுத்துவதாலேயே, இளம்பெண்கள் மீது பாலியல் தாக்குதல் அதிகளவில் நடக்கிறது. போதையில் அரிவாள், பட்டா கத்தியுடன் மாணவர்கள் கல்லுாரிக்கு செல்லும் கலாசாரம் துவங்கி உள்ளது. இவற்றிலிருந்து இளைஞர்கள், மாணவர்களை மீட்டெடுக்க வேண்டும். அதற்கான விழிப்புணர்வுக்காகவே சமத்துவ நடைபயணம் செல்லவுள்ளேன்.
- வைகோ, பொதுச்செயலர், ம.தி.மு.க.,

