மரம் வளர்ப்பதே மனிதர் அறம்; மாநாட்டுக்கு வர சீமான் அழைப்பு!
மரம் வளர்ப்பதே மனிதர் அறம்; மாநாட்டுக்கு வர சீமான் அழைப்பு!
ADDED : ஆக 25, 2025 07:53 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: ஆகஸ்ட் 30ம் தேதி சனிக்கிழமை திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே நடக்கும் மரங்கள் மாநாட்டிற்கு வருமாறு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அழைப்பு விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை: மரங்களோடு பேசுவோம். மரங்களுக்காகப் பேசுவோம். மனிதர்கள் இல்லாது மரங்கள் வாழும்; மரங்கள் இல்லாது மனிதர்கள் மட்டுமல்ல உலகில் எவ்வுயிரினமும் வாழ முடியாது.
ஆகஸ்ட் 30ம் தேதி சனிக்கிழமை காலை சரியாக 10 மணிக்கு திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே அருங்குளம் கூட்டுச்சாலை மனிதநேய பூங்கா வெற்றி தோட்டத்தில் மாநாடு நடக்கிறது.
மானத்தமிழர்கள் எல்லாம் மறக்காமல் கூடுவோம். மரம் வளர்ப்போம். மழை பெறுவோம். வனம் செய்வோம். மரம் மண்ணின் வரம். வளர்ப்பதே மனிதர் அறம். இவ்வாறு சீமான் கூறியுள்ளார்.