ADDED : மார் 24, 2025 06:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர் மற்றும் நெல், அரிசி வணிகர் சங்க சம்மேளனத்தின் தலைவர் துளசிங்கம் நேற்று கூறியதாவது:
அன்றாட தேவைக்கு 5, 10 கிலோ அரிசி வாங்கும் சாமானிய மக்கள் பாதிக்கப்படுவதால், 25 கிலோவுக்கு குறைவாக 'பேக்கிங்' செய்து விற்கும் அரிசிக்கு, 5 சதவீத ஜி.எஸ்.டி., வரியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். முழு விலக்கு அளிக்க வேண்டும்.
ஆலைகளுக்கு தேவையான நெல்லை, ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் கொள்முதல் செய்தால் மட்டும் சந்தை கட்டணம் வசூலிக்க வேண்டும். வேளாண் துறையினர், ஆலை உரிமையாளர்கள், நேரடியாக விவசாயிகள், வெளி மாநிலங்களில் கொள்முதல் செய்தாலும் சந்தை கட்டணம் வசூலிப்பதை நிறுத்த வேண்டும். அரிசி ஆலைகளுக்கு தடையின்றி மின்சாரம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.