ஜிஎஸ்டி வரிக்குறைப்பு ஓர் வர்த்தக புரட்சி: நயினார் நாகேந்திரன்
ஜிஎஸ்டி வரிக்குறைப்பு ஓர் வர்த்தக புரட்சி: நயினார் நாகேந்திரன்
ADDED : செப் 21, 2025 09:59 PM

சென்னை: ஜிஎஸ்டி வரிக்குறைப்பு சுதந்திர இந்தியாவில் முதல் முறையாக நடைபெற்றுள்ள வர்த்தகப் புரட்சி என்று தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.
அவரது அறிக்கை:
கடந்த சுதந்திர தினத்தன்று டில்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவில் உள்ள 140 கோடி மக்களுக்கும் தீபாவளிப் பரிசு காத்திருக்கிறது என அறிவித்தார். பிரதமர் மோடி அவர்களின் அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் நாடு முழுவதும் ஜிஎஸ்டி வரியை எளிமைப்படுத்தி. பெரும் வரிக்குறைப்பை அறிவித்தார். சுதந்திர இந்தியாவில் முதல் முறையாக நடைபெற்றுள்ள இந்த வர்த்தகப் புரட்சி உண்மையிலேயே பொதுமக்களுக்குப் பெரும் தீபாவளி பரிசுதான். பிரதமர் நரேந்திர மோடியின் தீபாவளிப் பரிசான வரிக்குறைப்பு நாளை 22-ம் தேதி முதல் நாடு முழுவதும் அமலாகிறது.
ஜிஎஸ்டி வரிக்குறைப்பின் முக்கிய பலன்கள்:
* ஜிஎஸ்டி குறைப்பு நடவடிக்கை மூலம் மக்கள் கையில் ரூ. 2 லட்சம் கோடி பணம் இருக்கும். அதனால் பொருட்கள் வாங்கும் திறன் அதிகரிக்கும்.
350-க்கும் மேற்பட்ட பொருட்களுக்கு ஜிஎஸ்டி குறைகிறது. இதனால், பொதுமக்களின் செலவுகள் கணிசமாகக் குறையும்.
12% மற்றும் 28% விகிதங்கள் நீக்கப்பட்டு. 5% மற்றும் 18% என்ற இரண்டு அடுக்குகள் மட்டுமே உள்ளன: இதனால் வர்த்தகர்கள், சேவை அமைப்புகள்
மிகவும் பயன் பெறுவார்கள்,
* வாகனங்கள், மின்னணு சாதனங்கள் போன்றவற்றின் விலை குறையும். • தனிப்பட்ட வாழ்நாள், மருத்துவக் காப்பீடு 186-இல் இருந்து 0% ஆகக் குறைக்கப்பட்டுள்ளதால். மக்கள் மருத்துவக் காப்பீட்டிற்கு அதிக முக்கியத்துவம்: கொடுப்பார்கள். இதன் மூலம் மக்களின் மருத்துவ செலவு குறையும், ஆரோக்கியம் மேம்படும்.
* பெரும்பாலான உயிர் காக்கும் மருந்துகளின் வரி முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மக்களின் மருந்து செலவு கணிசமாகக் குறையும்,
* பொதுமக்களின் அன்றாடத் தேவையான மளிகை பொருட்கள், உணவுப் பொருட்களின் ஜிஎஸ்டி வரி 99 சதவீதப் பொருட்களுக்கு 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்களுக்கு அதிகப் பலன் கிடைக்கும்.
* விவசாயிகள் பயன்படுத்தும் டிராக்டர்களின் விலை 50,000 வரை குறைகிறது. இதனால், நாடு முழுவதும் விவசாயிகள் அதிக அளவில் பயன்பெறுவார்கள். விவசாயம் மேம்படும்,
* ஜிஎஸ்டி வரிக்குறைப்பால் விலைவாசி குறைந்து மக்களிடம் பணப்புழக்கம் அதிகரிக்கும். இதன் மூலம் மேலும் பல புது தொழில்களில் முதலீடு அதிகரிக்கும்.
ஏற்கனவே ஆண்டு வருமானம் 12 லட்சம் ரூபாய் வரை வருமான வரி கிடையாது எனக் கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதனால் மாத சம்பளக்காரர்கள். அரசு ஊழியர்கள் பெரும் நிம்மதி அடைந்துள்ளனர். அவர்கள் செலவு செய்ய அதிகப் பணம் கையில் இருக்கும். இப்போது ஜிஎஸ்டி வரியும் குறைக்கப்பட்டுள்ளதால் இந்தியப் பொருளாதாரம் புதிய உச்சத்தை நோக்கிச் செல்லும்.
மக்களுக்கு தீபாவளிப் பரிசு வழங்கி மகிழ்ச்சியையும். பொருளாதார சீர்திருத்த மறுமலர்ச்சியையும் ஏற்படுத்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்கள் சார்பாக எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்..
இவ்வாறு நயினார் நாகேந்திரன் அறிக்கையில் கூறியுள்ளார்.

