நிலத்தின் சந்தை மதிப்பை விட வழிகாட்டி மதிப்பு குறைவு: மூர்த்தி
நிலத்தின் சந்தை மதிப்பை விட வழிகாட்டி மதிப்பு குறைவு: மூர்த்தி
ADDED : அக் 17, 2025 02:51 AM
சென்னை: ''நிலத்தின் சந்தை மதிப்பைவிட, வழிகாட்டி மதிப்பு 60 சதவீதம் வரை குறைவாக உள்ளது,'' என, வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார்.
சட்டசபையில் நடந்த விவாதம்:
அ.தி.மு.க., - தங்கமணி : வாய்மொழி உத்தரவாக, நிலத்தின் வழிகாட்டி மதிப்பு 30 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இது எந்த விதத்தில் நியாயம்?
அமைச்சர் மூர்த்தி: கிராமப்புறங்கள், நஞ்சை, புஞ்சை நிலங்களில், எந்த பிரச்னையும் இல்லை. பதிவின்போது ஒரு சில இடங்களில் தவறு நடக்கிறது. நகரங்கள், நகரங்களையொட்டிய பகுதிகளில் சந்தை மதிப்பு அதிகம் இருந்தால் அங்கு குறைவாக பதிவுக் கட்டணம் வாங்க முடியாது. அதுபோன்ற இடங்களில் 30 சதவீதம் அதிகமாக வாங்கியிருப்பர்.
நிலத்தின் சந்தை மதிப்பை விட, 60 முதல் 70 சதவீதம் வழிகாட்டி மதிப்பு குறைவாக உள்ளது. எங்கும் 30 சதவீதம் உயர்த்தப்படவில்லை. அப்படி எங்காவது வாங்கப்பட்டதாக ஆதாரத்துடன் தகவல் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு விவாதம் நடந் தது.